என் சிந்தனையைச் சிறப்பேற்ற நீ வருவாயா
உன் செந்தமிழையைச் செவிச்சாய்க்க நீ வருவாயா
சிட்டுக் குருவி ஓசையோடு நீ வருவாயா
சில மணித்துளிகள் மட்டும் போதும் நீ வருவாயா
நேற்று பெய்த மழைச் சாரலின் ஈரக் காற்றோடு நீ வருவாயா
நீண்ட இக்காலை வேளையைச் செம்மையாக்க நீ வருவாயா
நீளும் நம் இடைவெளியைச் செழுமையாக்க நீ வருவாயா
மல்லிகை பூவின் நறுமணத்தை நீ கடத்தி வருவாயா
உன்னால் அசையுற நாத்தின் நன் மதிப்பை நீ பெற்று வருவாயா
கடலோர கவிதைகளை நீ ஏற்று வருவாயா
கரும்புத் தோட்டத்தின் சலசலப்பை நீ களவாண்டு வருவாயா
கூவும் குயிலின் இன்னிசையை கண்டுகளிக்க நீ வருவாயா
கரையும் காக்கையின் காந்தக்குரலைக் கேட்க நீ வருவாயா
தளிரில் இருக்கும் நீர்த்துளியை நீ உரசிக் கொண்டு வருவாயா
என் கன்னத்தில் முத்தமிட நீ விரைந்து வருவாயா
என் கவிச்சிந்தனையை மெருகேற்றிட நீ என் அருகே வருவாயா!
காத்திருப்பேன் காலமெல்லாம் உனக்காக, எழுத்தாணி முனையின் ஏக்கத்தோடு!
ŞİMDİ OKUDUĞUN
மனதின் உளறல் இது
Şiirஇதயத்தின் ஒலிஅலைகளை வடம் பிடித்து ஒளிபரப்ப விரும்புகின்றேன் எழுத்துக்களாய். ஓய்விருந்தால் அவற்றை ஒளிரச் செய்யுங்கள் உங்கள் உதடுகளால். அனைத்திற்கும் ஆசைப்படுங்கள். எண்ணம் போல் தான் வாழ்க்கை. உணர்தல் வேண்டுமா பாடல்கள் கேளுங்கள். அனுபவம் வேண்டுமா படங...