❤கனவில் தோன்றினாய்
மாயமாய் போனது
உறக்கமும்...
நினைவில் பதிந்தாய்
மாயமாய் போனது
நிதர்சனமும்...❤சிவாவின் தந்தை சிதம்பரம் பலரும் தன்னை பார்த்திட வேண்டும் ஊரில் தன்னை மிஞ்சிட யாரும் இருக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகவே கஷ்டப்பட்டு உழைத்து ஊரிலே பெரும் பணக்காரர் என்ற இடத்தையும் பிடித்தவர். கணவன் எவ்வழியோ தானும் அவ்வழியே என வாழ்பவர் கனகா.
ஆனால் இருவருக்கும் எதிர்மாறாய் அன்பை மட்டுமே பெருமளவு மதிப்பவர் இவர்களது ஒரே மகன் சிவராம். இதனாலேயே இதுவரை தன் பெற்றறோரை எதற்கும் எதிர்த்திடாத சிவா முதன் முதலாக தன் காதலிற்காக எதிர்த்து யாரும் துணையின்றி தவித்த சாவித்ரியை கரம் பற்றி ஊர் விட்டே வெளியேறினார். சிதம்பரமும் தன் கௌரவம் தான் முக்கியம் என சிவா தன் மகனே அல்ல என கூறிவிட்டார்.முதலில் கூலிக்கு சிறு வேலைகளை செய்த சிவா தன் நெருங்கிய நண்பன் உதவியுடன் தங்குவதற்காக ஒரு சிறு வீடு மட்டும் எடுத்தார். சாவித்ரிக்கு சிறுவயது முதல் புதிய விதங்களில் ஆடைகளை வடிவமைப்பதில் பெரும் ஆர்வம் இருக்க அதுவே பொழுதுபோக்காய் ஆனது.
ஒருநாள் சாவித்ரி தன் வேலையில் மூழ்கி இருக்க இதனைப்பார்த்த சிவாவிற்கு உதித்தது அந்த எண்ணம். முதல் வேலையாய் சாவித்ரி ஏற்கனவே வடிவமைத்திருந்த ஆடைகளை கடைகளில் கொண்டு போய் காண்பிக்க இவர் தோற்றம் கண்டே சிலர் பார்க்காமலேயே தட்டிக்கழிக்க இருந்தும் விடாது பல கடைகள் ஏறியவருக்கு பலன் கிடைத்தது ஒரு கடையில். முதலில் இருந்த சில ஆடைகளை விற்பனைக்கு வைக்க போகப்போக விற்பனை அதிகரித்து மக்களிடையே ஆடைக்கான கேள்வியும் அதிகரித்தது.முதலில் ஒரு கடைக்கு விற்பனைக்கு இவர்கள் தயாரித்து வழங்க பின் அதுவே பல கடைகள் என மாறி..சதீஷ் பிறந்த பின் வெற்றிகரமாக தொடங்கியது RK designers. ஆடர்களுக்கு பெரிய அளவில் ஆடைகளை தயாரித்து வழங்குவதோடு சாதாரண ஆடைகளையும் தயாரித்து விற்பனைக்கென RK collection ஆடை நிலையமும் தொடங்கியது. தரமான துணிகளில் புதுவித அலங்காரங்களில் உற்பத்தி செய்திடும் RK உற்பத்திகளுக்கு என்றுமே மக்களிடம் முதலிடம் தான்.
YOU ARE READING
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....