❤கண்களால் கைது
செய்கிறாய் என்
உயிரை..
பதிலுக்கு
காதலால் கைது
செய்வேனே உன்
உயிரை...❤மெதுவாக சக்தி பக்கம் திரும்ப நல்ல வேளையாக அவன் யாருடனோ சீரியசாக போனில் கதைத்துக்கொண்டிருந்தான்.
நல்ல வேளை என பெருமூச்செறிந்தவள்..மெதுவாக சார் என சக்தியின் கையை சொறிந்தாள். அவன் சைகையால் பேசாமல் இரு என சொல்லி விட்டு தொடர்ந்து பேச..கொஞ்சம் நேரம் காத்திருந்தவள் கார் கண்ணாடி வழியே எட்டிப்பார்க்க அங்கே நிலா வீட்டினுள் படியேறுவது தெரிந்தது.
மீண்டும் பொறுமையின்றி சக்தி என கையை இழுக்க அவனோ இவள் செய்கைக்கு பதில் இன்றியே அவன் வேலையில் கவனமாக இருந்தான்."சக்தி சக்தி சக்தி.." என ஒவ்வொரு சக்திக்கும் அவனை எரிச்சல் கொள்ள வைக்கும் விதமாக இவள் இரு விரல்களால் அவன் கைவிரலில் இருந்து மேல் தோள் வரை முன்னேறிக்கொண்டே சொறிய.. பொறுமையிழந்த சக்தி.."டேமிட் என்ன வேணும் உனக்கு இன்னும் இறங்காம இங்க என்ன பன்னிட்டு இருக்க."
"ஆமா கேளுங்க நல்லா கதவ அடச்சி வெச்சிட்டு." உம் என்று முகத்தை இழுத்துக்கொண்டு கண்களாலே கதவையும் காட்டினாள் சாரு.
"நோ நோ சார் சாரி, உங்கள இல்ல...." அவளை முறைத்துக்கொண்டே கதவை அவன் திறந்து விட சிட்டாய் பறந்தாள் சாரு.
உள்ளே சென்று சில நிமிடங்களிலே நிலாவும் சாருவும் நன்கு நண்பிகளாகி விட..வீடே களைகட்டியது..போனில் கதைத்து முடித்து விட்டு சக்தி வீட்டினுள் நுழைந்தான். அவனை கண்டதும் நிலாவிற்கு சற்றே பதட்டம் எடுக்க அவனை பார்த்துக்கொண்டே சாருவிடம் கதைத்துக்கெண்டிருந்தாள்.
நேராக சக்தி நிலாவை நோக்கி வரவும் அவளது பதட்டம் அதிகமாக அதே நேரம்...
"அப்புறம் அங்க என்னலாம் இருந்திச்சி நிலா.." உரக்க கேட்டுக்கொண்டிருந்தாள் சாரு.
அவளை நிலா உஷ் உஷ் என வாயை குவித்து அமைதிப்படுத்த அது சாருவின் காதை எட்டவே இல்லை.
YOU ARE READING
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....