❤உயிர் சத்தமும்
உன் பெயர் சொல்ல..
இருக்கிறாய் எங்கும்
என்னவளாய்..
இது என்ன மாயம்
என்கிறேன்..❤கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வினோ சக்தியை இழுத்துக்கொண்டு வர அவன் இன்னும் சாரு அளித்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து விடுபடாதவனாய் அவன் இழுப்பிற்கே கனவின் நடப்பவன் போல் நடந்து கொண்டிருந்தான்.
"சீக்கிரம் நட சக்தி..இருக்க கோபத்துக்கு நம்மல விட்டுட்டு போய்ற போராங்க உன் அருமை மிஸஸ்..அப்புறம் இந்த காட்டுல தான் நாம சுத்த வரும்.." பேசிக்கொண்டே கார் வரை வந்தவன் திடீரென..."அய்யோ.." என்று அலறியவாறு ஓடினான்.
அவன் இட்ட கூச்சலில் தன்னிலை உணர்ந்த சக்தி அங்கு பார்க்க சாரு தான் பெரிய கல் ஒன்றை தூக்கிக்கொண்டு கார் கதவிற்கு ஓங்கி அடிக்க முயன்று கொண்டிருந்தாள்.
வினோ அருகில் சென்று அவள் கையில் இருந்த கல்லைப்பிடுங்க எத்தனிக்க அவள் முறைத்துக்கொண்டே மீண்டும் தன் பக்கம் இழுத்தாள். சில பல இழுப்புக்களின் பின் வினோ சக்தி பக்கமாய் திரும்பி அப்போதுதான் அவனை கவனித்தான். அவன் அங்கே நின்று வேடிக்கை பார்த்திருப்பதை.
"சக்தி என்னடா நடு ரோட்டுல நிக்கிற எரும மாடு மாதிரி நிக்கிற..வந்து கல்ல எடுடா.." வினோ இழுத்துக்கொண்டு சத்தமிட்டான். தலையில போட்றுவாளோ என பயந்தவண்ணம் பம்மிக்கொண்டே சாருவை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே அருகில் நெருங்கினான் சக்தி.
அவன் நெருங்குவதை கண்டதும் அவள் அவனை பார்த்து கண்களை கோபமாய் உருட்ட அவளைப்பார்த்துக்கொண்டே வந்து கல்லை தடவிக்கொண்டு நின்றான் சக்தி..
"ம்ம்ம் முடியல்ல..சாரு விடுமா அதை.. கதவ திறக்க முடியும் போல சீன் போட்டு சாவி எடுத்துட்டு வந்த..முடியலன்னா வாய திறந்து சொல்லலாம்ல..இப்படிதான் கல்லை எடுப்பியா..சக்தி சொல்லுடா கொஞ்சம்" வினோ கல்லைப்பிடுங்க கஷ்டப்பட்டு முயன்று கொண்டே, சக்தியின் பக்கம் பார்க்க..வினோதிற்கு அவன் கல்லை பிடுங்க உதவும் அழகைக்கண்ட பின் கஷ்டமும் மறந்து தான் போனது.
VOCÊ ESTÁ LENDO
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....