❤வானவில் கொடுத்தாய்
என் விழிகளில்..
துடிப்போடு இணைந்தாய்
இதயத்தில்..
நீங்கா மாயமாய்
நீளுகிறாய் என்னோடு..❤முதல் முறையாக சக்தியின் சிரிப்பில் தன்னிலை மறந்து நின்று கொண்டிருந்தாள் சாரு.
இவன் சிரிச்சா இவ்ளோ அம்சமாவா இருப்பான்..என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.சிரித்து முடித்தவன் அவளது பார்வையில் அவள் அருகில் வந்தான். தட்டி அவளை அழைக்க அப்போதுதான் கனவில் இருந்து விடுபடுவது போல் விழித்தாள் சாரு. ஒரு வேளை கனவோ என எண்ணிட சந்தேகம் இன்றி இன்னுமே சிரித்த முகத்தோடு நின்றிருந்தான் சக்தி. அவள் விழிப்பதை பார்த்தவன் அவள் நெற்றியில் தட்டி
"போய் முகத்த கழுவிக்கோ.." அறைக்கு சென்று விட்டான்.அவன் சென்று கதவை அடைத்த பின்தான் எதுக்கு முகம் கழுவ சொன்னான் என்று நினைவு வர..அதுக்கு காரணமும் அவன் தான் என்றும் தாமதமாய் தான் அவளுக்கு நினைவில் வந்தது. கதவு அடைத்திருக்க வேறு வழியின்றி தன் அறைக்கு சென்றாள் சாரு.
அதிகாலைப்பொழுது பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டு உலா வர ஆரம்பிக்க இரவு தாமதமாய் தூங்கி இருந்தாலும் வழமையான நேரத்திற்கே விழித்து விட்டாள் சாரு.
எழுந்து தயாராகிக் கீழே வந்தவள் சாவித்ரி சமயலறையில் இருக்க அங்கே சென்றாள்."குட் மார்னிங் வாம்மா சாரு.. நேற்று ரிசப்ஷன் எல்லாம் எப்படி?" காபி கப்பை கையில் கொடுத்தவாறே கேட்டார் அவர்.
வாங்கிக்கொண்டு சமையற்கட்டில் ஏறி அமர்ந்து கொண்டு.." ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சிம்மா...கல்யாணப்பொண்ணு.."என தொடங்கி கதையளக்கத்தொடங்கியவள் நேரம் காலம் இன்றி சாவித்ரிக்கு உதவியவாரே பேசிக்கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டே ஹால் பக்கம் திரும்பியவள் கண்ணில் பட்டது சக்தி தயாராகி படிக்கட்டு வழி கீழே இறங்கிக்கொண்டிருந்தது.
VOCÊ ESTÁ LENDO
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....