❤ 24 ❤

697 13 12
                                    

கதைகள் பேசும்
உன் விழிகளில்..
கரைந்திட விளையும்
என்னை தவிர்த்தே..
கண்டு மறையும்
மதியென..
மறைவதும்
பின் உதிப்பதும்
என்ன மாயமோ..❤

பாதையில் கண்கள் பதிந்திருந்தாலும் கருத்து ஆபிஸில் நடந்த நிகழ்வை தான் ஒளியை சுற்றும் விட்டில் பூச்சியென சுற்றிக்கொண்டிருந்தது.

எதிரில் நின்றிருந்த வினோதை பார்த்த ரம்யாவிற்கு திக் என்றது.

அதுவும் "கண்ணாமூச்சி முடிஞ்சதா.." என கேட்டது வேறு, இவ்வளவு நேரம் அவன் பார்வையில் இருந்து அவள் தப்பித்து ஓடியதை அவன் அறிந்திருக்கிறான் என்பதையும் சொல்லாமல் சொன்னது.

சட்டென கைகளிரண்டாலும் முகத்தை மூடிக்கொண்டவள் வினோத் குனிந்து பார்க்க முயல அவனை தள்ளி விட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விட்டாள்.

"ஹே இரு.." வினோத் அவள் பின்னால் ஓட  அவனது அவசரம் புரியாது அவனை தடுத்து நிறுத்தினாள் வினிதா.

"டேய் என்னடா நடக்குது இங்க.." வினிதா ஆச்சரியமாய் கேட்க..

"அய்யோ அதெல்லாம் உனக்கு புரியாது வழிய விடு முதல்ல..அவ போயிர போரா.." வினோத் பதற.."அதெல்லாம் முடியாது நீ சொல்லு பர்ஸ்ட்டு.." என நிற்க..

"வி ஆர் இன் லவ்.." கூறிவிட்டு வினோத் ஓட.. வினிதாவோ.. யாரு வி ஆர்.. என சீரியாசாக யோசித்துக்கொண்டிருந்தாள்.

வினோத் கூறிய பதில் தெளிவாய் ரம்யாவின் காதில் விழ சிரிப்புடனே அவன் வரும் முன் லிப்டினுள் சென்று கதவை மூடினாள்.

லிப்ட் கதவுகளோ இன்றைக்கு மட்டும் பார்த்து பிடிவாதமாய் மெதுவாக மூடுவது போல் தான் ரம்யாவிற்கு தோன்றியது.. அதுதான் உண்மை என்பது போல சிரிய இடைவெளியில் உள்ளே நுழைந்திருந்தான் வினோத்.

இதை எதிர்பார்க்காத ரம்யா பதட்டமாய் வெளியில் செல்ல பட்டனை அழுத்த போக சட்டென அவள் கையை பற்றி தடுத்தான் வினோத்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Donde viven las historias. Descúbrelo ahora