❤ 35 ❤

5.7K 241 130
                                    

நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய்
பனியாய்
கரைந்தேனே
ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே...❤

அன்று அங்கேயே தங்கிவிடலாம் என முடிவெடுத்திருந்தான் சக்தி. அவனை சம்மதிக்க வைத்திருந்தாள் சாரு. அங்கு சாருவுடன் பேசுவதற்கு சிவா ஏற்பாடு செய்திருந்த போனில் அவன் பேசுவதற்கே க்யூவில் அரைமணி நேரம் நிற்க வேண்டிய நிலை. இன்னும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டி வந்திருக்குமோ சாரு வந்து அனைவரையும் விரட்டிப்பிடித்து சக்திக்கு போனை எடுத்து கொடுத்தாள்.

ஒருவாரு பேசி சாரு கிடைத்ததும் கூறிவிட்டு நாளை காலை கார் அனுப்புமாறு கூறினான் சக்தி. பேசிவிட்டு அவன் திரும்பவும் அடித்துப்பிடித்துக்கொண்டு வந்து அவன் இடத்தை அடைத்தாள் சாரு.

"அக்கா இது ஏத்துக்க முடியாது பாரு.. அவர்க்கு மட்டும் தான் கொடுத்தா.. நீ எப்படி வந்து இடையில நிப்ப போ அங்கிட்டு.." ஒரு சிறுவன் இவளை முன்னால் வந்து விரட்ட..சக்தி இங்கு நடப்பது எல்லாம் வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

"டேய் நான் எவ்வளவோ நாள் கழிச்சிடா வந்திருக்கன்.. ஒரே ஒரு கோல்டா..."

"ஆமா நாமளும் பேச இங்க எவ்வளோ நேரமா காத்திட்டு இருக்கோம்..தள்ளு நாங்க எல்லாம் அக்காட்ட பேசின அப்புறம் நீ பேசிக்கோ.."

"ஒரே ஒரு முறை பேசிட்டு கொடுத்துர்ரன்டா.. பாரு அப்புறம் சார்க்கு கோபம் வந்திடும்.. அவர் வச்ச போன்தான் திரும்ப எடுத்துட்டு போய்டுவாறு..நாம சண்ட போட்டு ஒடச்சிடுவோம்ன்னு."

சாரு கூறவும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு மனமிறங்கி "சரி நான் பேசின அப்புறம் பேசு நீ.." அனுமதி வழங்கினான் கால்வாசி உயரத்தில் இருந்த அவன்.

சாரு ஏதோ இருந்ததற்கு இந்த யோசனை பரவாயில்லை என போனை அவனிடம் கொடுக்க..காதில் போனை வைத்து அந்த பக்கம் பேசுவதற்காக காத்திருந்தவனை வினோதமாய் பாத்திருந்தான் சக்தி. யார்க்கு அப்பிடி பேச போறாங்க அதுவும் ஊரே பேசுற அந்த அக்கா யாரு என்று ஆர்வமாய் பாத்துக்கொண்டிருக்க..."ஹலோ அக்கா.. ஆமா அக்கா இருக்கேன் அக்கா..நீங்க..சாரு வந்திருக்கா தெரியுமா.. கூடவே இருங்க இருங்க..." போனை கையில் பிடித்துக்கொண்டு சக்தியை ஒரு பார்த்து விட்டு..

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Tempat cerita menjadi hidup. Temukan sekarang