❤ஓவியம் போல்
உன்னை வரைந்திடுவேன்
உதிரம் கொண்டு நிறம்
எடுப்பேன் சிலையென
உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும்
உளியெடுப்பேன்..❤இரவு வானில் முழுமதி மேகங்களிடையே வந்து வந்து போக..கடற்கரையில் அதனை என்றும் போல் இல்லாது வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தான் வினோத். எண்ணங்கள் ஒவ்வொரு முறையும் போல் இந்த தடவையும் தன் வாழ்நாளில் மறக்க முடியா நினைவிற்கு பயணித்தது.
சிறுவயது முதலே முழு நிலவு தினம் எப்படியும் கடற்கரைக்கு வந்துவிடுவான். அன்றும் அப்படிதான் வந்து அமர்ந்திருந்தான்
அவ்வளவாக அன்று மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை.. கடலை பார்த்துக்கொண்டிருந்தவன் ஏதோ தோன்ற தன் வலப்பக்கமாய் பார்க்க அங்கு ஒரு பெண் கடலினுள் வேகமாக சென்று கொண்டிருந்தாள்.
முதலில் சும்மா செல்கிறாள் என பார்த்துக்கொண்டிருந்தவன் பின்தான் புரிந்தது அவளின் வேகம் எதற்காய் என்று.சட்டென எழுந்தவன் இயன்றளவு வேகமாய் அவளருகில் செல்ல..இவன் நெருங்கிடும் நேரம் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் கடல் தனக்குள் இழுத்துக்கொண்டிருந்தது.
அருகில் நீந்திச்சென்று அவளை ஒருவாரு பற்றியவன் கரைப்பக்கமாய் நீந்தி வந்து அவளை கரையில் போட்டான். நல்ல வேளை அவள் நார்மலாய் இருக்க வினோவிற்கு தான் தன் கோபத்தை அடக்க முடியவில்லை.. அடுத்த நொடி இவன் ஐந்து விரலும் அவள் கன்னத்தில் ஓவியம் தீட்டியிருக்க தரையில் விழுந்தவள் கன்னத்தையும் பதம் பார்த்திருந்தது மணலில் இருந்த கூர்மையான கல்.
கன்னத்தில் இரத்தம் வழிய எழுந்து அமர்ந்தவள் அருகில் வந்த வினோ.. "சாரி..நான்..ப்ச் எதுக்கு இப்போ இப்படி..?" அவன் கேட்கவும் பேசாமல் தலைகுனிந்தே இருந்தாள் அவள்.
"சொல்லு.. அப்படி சாகுற அளவுக்கு மேடம்க்கு என்ன பிரச்சனை.." அவன் கோபத்தில் கேட்க..அவனை நிமிர்ந்து பார்த்தவள்..கண்களை அங்கும் இங்கும் உருட்டி விட்டு.." ஆசிரமத்தில இருந்து போக சொல்லிட்டாங்க..படிப்பு வேற அரைவாசில இ..இருக்கு.." என்றாள்.
BINABASA MO ANG
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....