அங்கு பார்த்ததும் வர்ஷா குமார் சாது
"வீணா..ஆஆஆ........😲😲😲😲😲😲"
என கத்தினார்கள்.இவர்கள் கத்தும் சத்தம் கேட்டு வினை அங்கு ஓடி வந்து பாக்குறான். 'என்ன ஆச்சு யேன் கத்துநீங்க சொல்லுங்க'
வினை இப்படி கேக்கும் போதே வர்ஷா மயங்கி வினை மேல் விழுந்தால். உடனே வினை வர்ஷாவ கண்ணத்துல தட்டி 'வர்ஷா வர்ஷா வர்ஷாமா' என அவள் பெயர் சொல்லி கூப்பிட்டு பாக்குறான். வர்ஷாவிட்கு மயக்கம் தெளியவே இல்ல உடனே இவன் யாரை பற்றியும் யோசிக்காமல் உடனே அவன் பையில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வர்ஷா முகத்துல தெளிக்குறா. வர்ஷாவும் மயக்கம் தெளிஞ்சி எழுந்து அமர்ந்து வினைய கட்டி பிடிச்சி அழ ஆரம்பிக்குறா. உடனே வினை 'என்ன ஆச்சு வர்ஷா மா' வர்ஷா எதுவும் பேசாம ஆள்காட்டி விரலை மேல் நோக்கி காட்டி மேலே பாக்கும் படி சைகை காட்டுறாள். உடனே வினை மேல்நோக்கி டார்ச் லைட் அடித்து பாக்குறான். அங்கு வீணா வீணாவின் கழுத்து அறுபட்டு
ரத்தம் சொட்ட சொட்ட மரத்தில் ஒரு கிளையில் கயிரால் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டு இருந்தால். அதை பார்த்த அந்த நான்கு பேரும் அங்கேயே அமர்ந்து அழுது கொண்டு இருக்கும் போது ரவி அனு மற்றும் அபி அவி என எல்லோரும் அங்கு வந்து பார்த்து அழுதனர்.
அவி :- டேய் நாங்க இங்க இருக்குறது நலத்துக்கு இல்ல வாங்க நாம சதீஷ் ஆஹ் தேடலாம். அவன் என்ன நிலமைல இருக்கானோ அழுதது போதும் வாங்க.அபி :- என்னடா நெனச்சிட்டு இருக்க இறந்தது நம்ம பிரண்ட் டா எப்படி எங்க எல்லாரையும் அழுக கூடாதுனு சொல்ற. உனக்கு மனசாட்சி இல்லையா டா? அங்க இறந்து கெடக்குறது நம்ம வீணா ட.
அவி:- எனக்கும் இப்படி பேச கஷ்டமா தான் இருக்கு டி பிலீஸ் சதீஷ் ஆஹ் சரி காப்பாற்ற வேணுமே. அதனால தான் சொல்றேன் ப்லீஸ்
(மற்ற யாரும் ஏதும் பேசாம அமைதியா அவி சொல்றத கேட்டு சதீஷ் ஆஹ் தேடி போக சரின்னு சொல்றாங்க. ஆன யாராலும் வீணா இறந்துடான்னு ஏத்துக்க முடியல. இருந்தாலும் சதீஷ் ஆஹ் காகாப்பாத்தணும்னு எண்ணத்தோடு திரும்புறாங்க அங்கே சதீஷ் மெல்ல வர்றான். அதை வினை பாக்குறான். உடனே ஓடிப்போய் 'சதீ.......ஷ்' னு கத்திட்டே ஓடி போய் கட்டி பிடிக்குறான்.அப்புறம் எல்லாருக்கும் அவனை பார்த்த சந்தோஷத்துல ஓடி போய் கட்டி பிச்சிட்டு அப்புறம் விலகிடுறாங்க. )
YOU ARE READING
இருள் மறைத்திடும் மர்மம்
Horrorஇக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??