4.

2.9K 123 1
                                    

ஜீவாவும் சஞ்சனாவும் ஒரு வாரத்திலேயே நல்ல நண்பர்கள் ஆனார்கள்.ஆனால் அஷ்வின் ஒரு மர்மமாகவே இருந்தான்.எப்போது வீட்டுக்கு வருகிரான்.எப்போது போகிரான்.கல்லூரி முடிந்தவுடன் எங்கு போகிரான் என்பது புதிராகவே இருந்தது.அவனை பார்ப்பதே அரிதாக தான் இருந்தது.

"ஹாய் சஞ்சு.இங்க என்ன பன்னற???",என்றான் ஜீவா உற்சாகமாக.

"கிச்சன் ல என்ன டா பன்னுவாங்க.சமையல் பன்னிகிட்டு இருக்கேன்",என்றாள் பெருமையாக.

"அய்யோ "என்று அவன் நெஞ்சை பிடித்தான்.

"என்ன ஜீவா.அதிர்ச்சியா இருக்கா.எப்போவாவது இந்த ஆச்சர்யங்கள் நடக்கும்",என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சஞ்சனாவின் அம்மா.

"சரி ஆன்டீ.நான் குடுத்து வச்சது அவ்வளவு தான்.உங்க சமையல் சாபிடலாம்னு ஆசையா வந்தேன்.இனி எதாவது உணவகம் தான் போகனும்",என்றான் சோகமாக.

"போ டா போ.இன்னிக்கு கோழி குழம்பு,கறி வருவல் செய்யரேன்.வேண்டாம் என்றால் போ.எனக்கு என்ன",என்றாள் சஞ்சனா.

"என்ன சஞ்சு மா.சும்மா தானே விளையாடினேன் .நீ சமைத்தால் சூப்பரா தான் இருக்கும்.ஆன்டீ  சும்மா சஞ்சுவை கிண்டல் பன்னாதிங்க.எனக்கு கோவம் வரும் சொல்லிட்டேன்",என்று கூறி சஞ்சனாவின் அம்மாவை பார்த்து கண் அடித்தான்.

அம்மா சிரித்துக் கொண்டே அவன் தோளை செல்லமாக தட்டினாள்.

"ஜீவா உன் அண்ணனையும் கூப்பிடு பா.இங்கே சாபிடட்டும்.",என்றாள் அம்மா அன்பாக.

ஜீவா ஒரு முறை யோசித்துவிட்டு "சரி ஆன்டீ .கூடிட்டு வரேன்.",என்றான்.

"டேய் உங்க அண்ணன் கிட்ட ஏதோ மர்மம் இருக்கு டா.கல்லூரி முடிஞ்சு ஒரு நாள் கூட வீட்டுக்கு வந்தது இல்லை.உனக்கும் எங்க போராருனு தெரியலனு சொல்லுர.நான் அதை கண்டு பிடிக்குரேன் பாரு",என்றாள் சஞ்சனா யோசனையாக.

"சரிங்க ரிவால்வர் ரீட்டா.நீங்க மெதுவா துப்பரிஞ்சு சொல்லுங்க.இப்போ சீக்கரம் சமையல் செய்யுங்க.பசிக்குது",என்றான் கிண்டலாக.

பேசிக் கொண்டு இருக்கும் போதே வெளியில் அழைப்பு மணியின் சத்தம் கேட்டது.ஜீவா யார் என்று பார்க்க சென்றான்.அங்கு அஷ்வின் நின்று கொண்டு இருந்தான்.

"வீட்டு சாவி குடு",என்றான் அவசரமாக‌

"இன்னிக்கு வெளியே சாப்பிட வேண்டாம் அண்ணா.இங்கேயே சாப்பிடலாம்",என்றான் ஜீவா.

"நீ சாப்பிடு.நான் ஒரு வேலையா வெளியே போரேன்.வர நாளை மதியம் ஆகலாம்.",என்று கூறி சாவியை வாங்கினான்.

ஜீவா குழப்பமாய் அவன் செல்வதை பார்த்தான்.

         அன்று இரவு சஞ்சனாவுக்கு தூக்கம் வரவில்லை.புல்வெளியில் உலாவலாம் என்று எண்ணி வெளியே சென்றாள்.

சிறிது நேரம் நடந்து கொண்டு இருந்தாள்.திடிரென பின் வீட்டில் இருந்து பாட்டு சத்தம் அலறியது.

"ஜீவா ஏன் இப்படி சத்தமாக பாட்டு கேட்கிரான்.அஷ்வின் இருந்த வரை இவன் ஒழுங்காக இருந்தான்.இப்போது என்ன ஆயிற்று",என்று குழம்பினாள்.

சஞ்சனா மெதுவாக பின் வீட்டின் வாசலை எட்டிப் பார்த்தாள்.கதவு திறந்து இருந்தது.இந்த இரவு நேரத்தில் கதவை திறந்து வைத்து கொண்டு என்ன செய்கிரான் என்று யோசித்தாள்.கதவை தள்ளிக் கொண்டு மெதுவாக உள்ளே சென்றாள்.ஹாலில் தொலைக்காட்சி அலறி கொண்டு இருந்தது.நடை பாதையில் மது பாட்டில்கள் உருண்டு கொண்டு இருந்தன.படுக்கை அறையில் இருந்து ஒருவன் வெளியே வந்து தடுமாறி இவள் அருகில் வந்து விழுந்தான்.

          சஞ்சனா பயந்து போனாள்.அங்கு இருந்து வெளியேருவதர்க்கு திரும்பிய போது யாரோ அவள் கையை பிடித்ததை உணர்ந்தாள்.

காதலில் விழுந்தேன்Where stories live. Discover now