ஜீவா ஜீப்பை கழுவிக் கொண்டு இருந்தான்.அப்போது ஒரு பெண் இரும்பு கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.அவளை பார்த்த அந்த நொடியே ஜீவாவின் மனதில் ஒரு பின்னனி இசை பாட தொடங்கியது.சஞ்சனா வீட்டை விட்டு வெளியே வந்து அவளை வரவேற்றாள்.
"வா திவ்யா .எப்படி இருக்க?",என்றாள் அன்பாக.
"திவ்யா!!! என்ன ஒரு அழகிய பெயர்",என்று கூறிக் கொண்டே இவர்களை நோக்கி வந்தான் ஜீவா.
"ஹாய் நான் ஜீவா",என்று கூறி அவன் கையை நீட்டினான்.
சாஞ்சனா அவன் கையை தட்டி விட்டு"ரொம்ப வழியாதே டா.அவளுக்கு அடுத்த மாதம் கல்யாணம்",என்றாள்.
ஜீவாவின் மனதில் ஓடிக் கொண்டு இருந்த பின்னனி இசை சுலோ மோஷனில் பாடி பின் சட்டென்று நின்றது.அவன் மயங்கி விழுவதை போல் நடித்தான்.சஞ்சனாவும் திவ்யாவும் சிரித்தார்கள்.
பின் மூவரும் காபி குடித்துக் கொண்டே மொட்டை மாடியில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
"நாளைக்கு என் பிறந்தநாள்.அடுத்த வருடம் என் கணவரோடு கொண்டாடுவேன்.எனவே இது தான் நான் என் நண்பர்களோடு கொண்டாடும் கடைசி பிறந்த நாள்.அதனால் கொஞ்சம் விமர்சியாக கொண்டாட ஆசை படுகிரேன்.எல்லா நண்பர்களையும் அழைத்துள்ளேன்.நீயும் ஜீவாவும் கண்டிப்பா வரனும்",என்றாள் திவ்யா.
"அதுக்கென்ன வந்துட்டா போச்சு.எத்தனை மணிக்கு ??",என்றாள் சஞ்சனா.
"நாளை மாலை 7மணிக்கு .என் வீட்டில்",என்றாள் திவ்யா.
மறுநாள் காலையில் திவ்யாவுக்கு பரிசு வாங்க ஜீவாவும் சஞ்சனாவும் கடைக்கு சென்றனர்.
"என்ன பரிசு வாங்கி தர போகிறாய்",என்றான் ஜீவா.
"வாங்கி தர போகிரேன் இல்லை போகிரோம்",என்று அவனை திருத்தினாள்.
"என்ன ஏதோ தனியாக போகிறாயே என்று கூட வந்தால்.இந்த செலவு வேறா .என்னிடம் பணம் எல்லாம் இல்லை.நான் பரம ஏழை",என்றான் .
YOU ARE READING
காதலில் விழுந்தேன்
Teen Fictionதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???