சஞ்சனா செய்வது அறியாது அங்கு நின்று கொண்டு இருந்தாள்.வெளியே வரலாம் என்று அவள் நினைத்த போது அஷ்வினுடைய போன் அடித்தது.அவன் எங்கே என்று எட்டி பார்த்தாள்.அவன் புல்வெளியில் நின்று கொண்டு இருந்தான்.அவனிடம் போனை கொடுக்கலாம் என்று எடுத்தாள்.அவள் வீட்டில் இருந்து அழைப்பு வருவதை கவனித்தாள்.
"சொல்லுங்க அம்மா",என்றாள் கண்ணை துடைத்துக் கொண்டே.
"என்ன சஞ்சு மாற்றினாயா இல்லையா.என்ன செய்கிராய் இவ்வளவு நேரம்",என்றாள் எரிச்சலாக.
"மாற்றி விட்டேன் அம்மா.அவனுக்கு சமைக்கவே தெரியவில்லை .அதான் என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டு இருந்தேன் ",என்று பொய் சொன்னாள்.
"சரி சீக்கிரம் வந்து விடு.உன் அப்பா வரும் நேரம் இது.அவருக்கு தெரிந்தால் என்னை தான் திட்டுவார்.",என்று அம்மா எச்சரித்தாள.்
"அப்பா வருவதர்குள் வந்து விடுவேன்.கவலை படாதீர்கள்", என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
அவன் போனையே வெறித்து ஒரு முறை பார்த்தாள்.பின் அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.
அஷ்வின் அருகில் சென்று நின்றாள்.
"அஷ்வின்",என்றாள் மெதுவாக.
"நீ இன்னும் போகலையா.போய் விடு இங்கே இருந்து.இனி பேசுவதர்க்கு எதுவும் இல்லை",என்றான் கோவமாக.
"நான் போய் விடுகிறேன் ஆனால்
ஒரு கேள்விக்கு எனக்கு விடை தெரிய வேண்டும்",என்றாள் .
அவன் என்ன என்பதை போல புருவத்தை உயர்த்தினான்.
"எதர்க்காக உன் கைபேசியில் என் புகைப்படத்தை வைத்து இருக்கிறாய்",என்றாள் அவன் கைபேசியை காட்டி.
அஷ்வின் முகம் மாறியது.அவன் பதட்டம் ஆனான்.முகம் எல்லாம் வேர்த்து போனது.
"நீ எதர்க்காக என் கைபேசியை எடுத்தாய்.குடு அதை",என்று கூறி அதை பிடுங்கினான்.
"இது நான் திவ்யா வீட்டுக்கு சென்ற போது அணிந்த இருந்த ஆடை.அவள் வீட்டில் இருந்து நான் வரும் போது எனக்கு தெரியாமல் எடுத்து இருக்கிறாய்.அந்த புகைப்படத்தை உன் கைபேசியில் வால் பேப்பராக வைத்து இருக்கிறாய்.இதர்க்கு என்ன அர்த்தம்",என்றாள்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்
Teen Fictionதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???