அஷ்வினுடைய மர்மமான நடவடிக்கைக்கு காரணம் தெரிந்த பிறகு அவன் மேல் சஞ்சனாவுக்கு இருந்த காதல் இன்னும் அதிகமானது.அவனை ரகசியமாக ரசித்தாள்.அவனோடு பேசுவதர்க்காக உருவாக்கும் காரணங்களும் அவன் பார்க்காத போது வீசும் கள்ள பார்வைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.அஷ்வினிடம் காதலை சொல்ல வேண்டும் என்று சஞ்சனாவுக்கு தோன்றவே இல்லை.ஜீவாவிடம் இதை பற்றி பேசஅவளுக்கு தைரியம் வரவில்லை.
நாட்கள் இப்படியே மகிழ்ச்சியாக சென்றன.ஒரு நாள் ஜீவா கையில் இனிப்புடன் வந்தான்.
"ஹே சஞ்சு,இந்தா எடுத்துக்கோ ",என்று கூறி சுவீட் டப்பாவை நீட்டினான்.
"எதுக்கு டா இது",என்று ஆர்வமாக கேட்டாள்.
"அஷ்வின் அப்பா ஆகிவிட்டான்",என்றான் இயல்பாக.
சஞ்சனா அதிர்ச்சியில் சுவீட்டை கீழே போட்டாள்.
"உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா",என்றாள் சோகமாக.
"ஆமாம் நான் உன்கிட்ட சொல்லவில்லையா",என்றான் சந்தேகமாக.
சஞ்சனா உலகமே இருன்டு போனதை போல உணர்ந்தாள்.இது எப்படி தனக்கு தெரியாமல் போனது என்று எண்ணி நொந்து போனாள்.
சஞ்சனாவின் அம்மா உள்ளே நுழைந்தாள்.
"என்ன ஜீவா.என்ன விஷேஷம்.எதுக்கு பா சுவீட்டு",என்றாள்.
"அது ஒன்னும் இல்லை ஆன்டீ.அஷ்வின் தன் பி.பி.எம் படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டான்
அதுக்கு தான் இந்த சுவீட்",என்று கூறி சஞ்சனாவை பார்த்து கண் அடித்தான்.
சஞ்சனா அவனை ஒரு கொலை பார்வை பார்த்தாள்.நின்று போன மூச்சு திரும்பி வந்ததைப் போல உணர்ந்தாள்.
"சரி பா மேற்கொண்டு அவன் என்ன செய்ய போகிறான்",என்று அம்மா வினவினாள்.
"அவன் சுவீடன்னில் இருக்கும் ஒரு பல்கலைகழகத்தில் மேற்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளான் ஆன்டீ.கூடிய சீக்கிரம் அங்கு போய் விடுவான்",என்றான் மகிழ்ச்சியாக.
சஞ்சனாவின் உடம்பில் திடீர் என்று ஒரு பயம் தவ்விக் கொண்டது.கைகள் நடுங்க ஆரம்பித்தன.கண்கள் கலங்க ஆரம்பித்தன.
அழுகையை அடக்கி கொண்டு"படிப்பு முடிய எவ்வளவு நாள் ஆகும்.எப்போது திரும்பி வருவார்",என்றாள்.
"படிப்பு இரண்டு வருடத்தில் முடிந்து விடும்.நல்ல வேலை கிடைத்தால் அங்கேயே தங்கி விடுவான்",என்றான் ஜீவா.
"ஒரு நிமிடம் வந்து விடுகிறேன் ",என்று கூறி சஞ்சனா அவள் அறைக்கு சென்று கதவை சாத்தினாள்.
பின் தன் ஜன்னல் வழியாக பின் வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு கதறி அழுதாள்.
Note: Hello readers.How ya all.Have you enjoyed this story so far.Ignore any spelling mistakes pls coz they are unintentional.Do vote for me in every chapter.It will help me to give my best in the next chapter.I thank all those who have voted for me.A special thanks to arakshaya08 who has been encouraging me continuously by voting for me regularly.Thank you.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்
Teen Fictionதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???