13.

2.9K 138 3
                                    

சஞ்சனா அறை துக்கத்தில் விழித்து மணியை பார்த்த போது திடுகிட்டாள்.மணி 10 ஆகி விட்டது.

அவசரமாக வெளியே வந்தாள்.அவள் அம்மா சமைத்துக் கொண்டு இருந்தாள்.

"ஏன் அம்மா என்னை எழுப்பவில்லை",என்றாள்.

"உன்னை பத்து வாட்டி எழுப்பினேன்.நீ அசைய கூட இல்லை",என்றாள் அம்மா.

"அப்படியா ",என்றாள் யோசனையாக.

தான் அஷ்வின்னை பார்த்துவிட்டு 3 மணிக்கு தூங்கியது நினைவுக்கு வந்தது.

"சரி மா எனக்கு தலை ரொம்ப வலிக்குது .காபி போட்டுக் குடு ",என்றாள் தலையை பிடித்துக் கொண்டே.

காபியோடு புல்வெளிக்கு சென்று அமர்ந்தாள்.கல்லூரி செல்லாதத‌ர்க்கு பேராசிரியரிடம் என்ன காரணம் சொல்லலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.

"நீ எப்படி யோசித்து திட்டம் போட்டாலும் அடுத்த தேர்தலில் வேட்பாளர் ஆக முடியாது",என்றான் ஜீவா.

அவள் அவனை பார்த்து விட்டு திரும்பினாள்.அவன் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

"என்ன சஞ்சு இன்றைக்கு கல்லூரிக்கு போகலையா",என்றான்.

அவள் எதுவும் பேசாமல் காபி குடித்துக் கொண்டு இருந்தாள்.

ஜீவா தன் தோளால் அவள் தோளை இடித்தான்.

"பேசாதே.உன்னால் வர முடியாது என்று ஒரு போன் கூட பன்னி சொல்ல முடியாது இல்லையா",என்றாள் கோவமாக.

"சாரி சஞ்சு.என் நிலைமை அப்படி.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று போன் வரவும் அவசரமாக ஓடினேன்.அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்று வந்தேன்.பின் அவருக்கு மருந்து வாங்க சென்றேன்.இதில் உனக்கு தகவல் சொல்ல மறந்துவிட்டேன்.",என்றான்.

சஞ்சனா அவனை பார்த்தாள்.என்ன ஒரு பொறுப்பான பையன் என்று எண்ணி பூரித்துப் போனாள்.

"சரி இப்போ அப்பா எப்படி இருக்கிறார்.",என்றாள்.

"இப்போ நல்ல இருக்கிறார்",என்றான்.

காதலில் விழுந்தேன்Where stories live. Discover now