லாரி இடித்த வேகத்தில் ஜீப் சுழன்று சென்று ஒரு ஓரமாக நின்றது .கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது.
"சஞ்சனா!! சஞ்சனா!! ",என்று அஷ்வின் கத்தினான்.
சஞ்சனா சீட்டுக்கு அடியில் இருந்து எழுந்தாள்.தலை முழுவதும் நொறுங்கிய கண்ணாடி துண்டுகள் காணப்பட்டன.பயத்தில் அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.அஷ்வின் அவள் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி" உனக்கு எதுவும் ஆகலையே",என்றான்.
பயத்தில் அவள் மனம் பட படத்தது.அவளால் பேச முடியவில்லை.கண்களில் இருந்து நீர் கசிந்தது.அஷ்வின் ஒரு விரலால் அவள் கண்ணீரை துடைத்தான்.
"ஒன்றும் ஆகவில்லை எல்லாம் சரி ஆகிவிடும்.பயப்படதே",என்று ஆறுதல் கூறினான்.
அவள் "உன்னை நம்புகிரேன்"
என்பதைப் போல மெதுவாக தலை அசைத்துவிட்டு அவன் கையை இருக்கி பிடித்தாள்.
அவன்"ஆஹ்ஹ்.......",என்று வலியில் கத்தினான்.
அப்போது தான் அவன் கையில் இரத்தம் வழிவதை அவள் கவனித்தாள்.அவள் பிடியில் இருந்து கையை விலக்கி உதரினான் அஷ்வின்.வலி தாங்க முடியாமல் அவன் முகத்தை சுருக்கினான்.
சஞ்சனா செய்வது அறியாது குழம்பி போய் இருந்தாள்.
அவள் கைபேசி ஒலித்தது.
அவசரமாக எடுத்து பார்த்தாள்.வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.
அவள் பேசும் முன் அஷ்வின் குறுக்கிட்டான்.
"உன் அப்பா என்றால் நடந்ததை சொல்லாதே.இப்போது தான்
உன் தோழி வீட்டில் இருந்து கிலம்பினோம்.சற்று நேரத்தில் வந்து விடுவோம் என்று கூறு",என்றான்.
"ஆனால் நீ எப்படி வண்டி ஓட்டுவாய்.உன் கையில் அடி பட்டு இருக்கே",என்றாள் அக்கறையாக.
"அதை பற்றி கவலை படாதே.உன்னை பத்திரமாக வீட்டில் சேர்ப்பது என் கடமை",என்றான் வலியுடன்.
சஞ்சனா அவன் சொன்னபடியே அப்பாவிடம் கூறினாள்.
அஷ்வின் வண்டியை கிளப்பினான்.வழி தோரும் சஞ்சனா அஷ்வின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.அவன் வலியில் மிகவும் துடித்தான்.பல முறை தன் கையை காற்றில் உதறிக் கொண்டான்.எனினும் விடாமல் வண்டியை ஓட்டினான்.அவர்கள் வீட்டை அடைந்த போது மணி 11.
சஞ்சனாவின் அப்பா வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தார்.
"என்னம்மா இவ்வளவு நேரம்.இனி இது போன்று நிகழ்ச்சிகளுக்கு உன்னை போக விட மாட்டேன் பாரு",என்றார் கண்டிப்பாக.
சஞ்சனா மௌனமாக நின்றாள்.
"சரி சரி உள்ளே போ",என்றார்.
அஷ்வின் தன் ஜீப்பை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான்.சஞ்சனாவின் அப்பா நிற்பதை பார்த்து விட்டு தன் கையை பின்னாடி மறைத்தான்.
"சாரி தம்பி.உங்களுக்கு இந்த நேரத்தில் வீண் சிரமம்",என்றார் கனிவாக.
"பரவாயில்லை அங்கிள்",என்று கூறி அஷ்வின் தன் வீட்டை நோக்கி சென்றான்.
சஞ்சனாவால் அன்று இரவு தூங்க முடியவில்லை.குற்ற உணர்ச்சி அவளை கொன்றது.
அவளுக்காக உதவி செய்ய வந்ததால் தான் அவனுக்கு அடி பட்டது.மேலும் அவனை கோவப்படுத்தாமல் இருந்திருந்தால் விரைவாக வீடு திரும்பி இருக்க முடியும்.இந்த விபத்து நடந்து இருக்காது.எல்லாம் என் தப்பு தான் என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டாள்.
வலியோடு அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறானோ என்று எண்ணும் போது வேதனையாய் இருந்தது.அவள் அறையில் இருந்த முதல் உதவி டப்பாவை எடுத்துக் கொண்டு சற்றும் யோசிக்காமல் அவள் ஜன்னலை திறந்து வெளியே குதித்தாள்.
ESTÁS LEYENDO
காதலில் விழுந்தேன்
Novela Juvenilதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???