இனி தன் காதலை மறைத்தால் அவனை இழக்க நேரிடும் என்று சஞ்சனா புரிந்து கொண்டாள்.எப்படியாவது அவனிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தாள்.என்ன சொல்லுவது எப்படி சொல்லுவது என்று யோசித்தாள்.கல்லூரி முடிந்தவுடன் அன்று மாலை எப்படியாவது அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள்.
அன்று நினைத்ததை விட மிக மெதுவாக நேரம் சென்றது.ஒரு வழியாக கல்லூரி முடிந்தது.விரைவாக வீட்டுக்கு சென்றாள்.
அவன் அவள் வீட்டு வழியாக தான் செல்ல வேண்டும் .அப்போது ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறலாம் என்று திட்டமிட்டாள்.ஆனால் இரவு வரை அவன் கண்ணில் தென் படவே இல்லை.நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் சென்றாள்.மிகவும் பதட்டமாக இருந்தாள்.கண்கள் தொலைகாட்சியை பார்த்தன ஆனால் அவள் மனது வேற யோசனையில் இருந்தது.திடிர் என்று அழைப்பு மணி ஒலித்தது.
"சஞ்சனா யாருன்னு பாரு மா",என்று அம்மா சமையல் அறையில் இருந்து கத்தினாள்.
சஞ்சனா சலிப்பாக எழுந்து கதவை திறந்தாள்.அஷ்வின் நின்று கொண்டு இருந்தான்.ஒரு வேளை இது கனவாக இருக்குமோ என்று கண்களை நங்கு துடைத்துவிட்டு பார்த்தாள்.கனவில்லை அவன் இன்னும் நின்று கொண்டு தான் இருந்தான்.
"யாரு வந்திர்க்கா சஞ்சு",என்று கூறிக் கொண்டே கதவோரம் வந்தாள் அம்மா.
"வா பா அஷ்வின் உள்ளே வா பா",என்றாள் அன்பாக.
"ஆன்டி வீட்டில் காஸ் தீர்ந்துவிட்டது.புதுசை எப்படி மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை.கொஞ்சம் வந்து மாற்றி தர முடியுமா",என்றான் பனிவாக.
"சரி பா நீ போ நான் 5 நிமிடத்தில் வரேன்",என்றாள் அம்மா.
"சஞ்சு நீ அடுப்பை பாரு.நான் போய்விட்டு வந்து விடுகிரேன் ",என்றாள் அம்மா.
"அம்மா நீங்க இருங்க நான் போய்விட்டு வருகிரேன்",என்றாள் சஞ்சனா.
"உனக்கு மாற்ற தெரியுமா",என்றாள் அம்மா சந்தேகமாக.
"அம்மா!!!!",என்றாள் சஞ்சனா கொஞ்சலாக.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்
Teen Fictionதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???