அன்று இரவு நடந்தது சஞ்சனாவை மிகவும் பாதித்தது.ஜீவாவை பார்ப்பதை அவள் தவிர்த்து வந்தாள்.ஜீவாவோடு பேசி இரண்டு நாட்கள் ஆகின.
சஞ்சனா கல்லூரி செல்லுவதர்க்காக வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
பேருந்து நிலையத்தில் தன் கல்லூரி பேருந்துக்காக காத்து கொண்டு இருந்தாள்.அப்போது அவள் அருகில் ஒரு ஜீப் வந்து நின்றது.உள்ளே ஜிவா இருந்தான்.
"வா சஞ்சனா.இன்னிக்கு நான் உன்னை கல்லூரியில் விடுரேன்",என்றான்.
"தேவையில்லை எனக்கு போக தெரியும்",என்றாள் அவனை பார்க்காமல்.
"நீ வரவில்லை என்றாள் உன்னை வலுகட்டாயமாக ஏற்றி செல்வேன்",என்றான் சிரித்துக் கொண்டே.
"நீ யார் என்றே எனக்கு தெரியாது.போய் விடு",என்று கத்தினாள்.
அனைவரும் இவர்களை பார்க்க தொடங்கினார்கள்.
"பிளீஸ் சஞ்சு.உன் கூட பேசனும்.வா",என்றான் பாவமாக.
அவள் கல்லூரி பேருந்து வந்தது.ஆனால் அவள் அதில் ஏறாமல் மௌனமாக ஜீப்பில் ஏறினாள்.
சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
"சாரி சஞ்சு.அஷ்வின் நடந்ததை சொன்னான்.ஆனால் நீ ஏன் என் மேல் கோவமாக இருக்கிறாய்.இதில் என் தப்பு என்ன இருக்கு.உன்னை யார் அந்த நேரம் அங்கே போக சொன்னது",என்றான்.
சாஞ்சனாவின் முகம் கோவத்தில் சிவந்தது.
"எல்லாமே உன் தப்பு தான் டா.உன் நண்பனை வீட்டில் தங்க அழைத்தது யார்.அவனோடு சேர்ந்து மது அருந்தி கும்மாளம் போட திட்டமிட்டது யார்.எல்லாமே நீ தானே",என்றாள் கோவமாக.
ஜிவா அமைதியாக வண்டி ஓடிக் கொண்டு இருந்தான்.
"என் பாட்டி தங்கி இருந்த வீடு டா அது.அதை புனிதமான கோவிலை போல் நான் வைத்து இருந்தேன்.நீ வந்து தங்கி அதை சாக்கடை ஆக்கி விட்டாய்",என்றாள்.
"அப்போ எதர்க்காக கோவிலை வாடகைக்கு விட்டீர்ககள்.
தினமும் பூஜை செய்து இருக்க வேண்டியது தானே",என்றான் கோவமாக.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்
Teen Fictionதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???