"ஹாய் திவ்யா.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.",என்று கூறி அவள் வாங்கி வந்த பரிசை குடுத்தாள் சஞ்சனா.
"தேங்க்ஸ் டி. என்ன டி ஜீவா வரலையா?," என்றாள் திவ்யா.
"இல்லை டி.அவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை",என்றாள் சஞ்சனா.
"சரி டி எல்லோரும் வந்தாச்சு.வா கேக் வெட்டலாம்",என்றாள் திவ்யா.
பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நடந்தது.பல விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.அதில்
அனைவரும் பங்கேற்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தார்கள்.நண்பர்களோடு பேசிக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை சஞ்சனாவுக்கு.திடிர் என்று அஷ்வின் நியாபகம் வரவே கடிகாரத்தை பார்த்தாள்.நல்ல வேளை மணி 8.50 தான் ஆனது.
"திவ்யா நான் கிலம்பனும்.மறுபடியும் இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.",என்றாள்.
"சரி டி.நீ வந்தது ரொம்ப மகிழ்ச்சி.",என்று கூறி அவளை வழி அனுப்ப வெளியே வந்தாள் திவ்யா.
வெளியே வந்த போது மணி சரியாக 9 ஆனது.வாசலில் இருந்து சிறிது தூரம் தள்ளி ஜீப்பை நிறுத்தி இருந்தான் அஷ்வின். தன் இரண்டு கைகளையும் பேண்ட்டு பாக்கட்குள் விட்டுக் கொண்டு ஜீப்பின் மீது சாய்ந்து நின்று கொண்டு இருந்தான்.
"நி எப்படி டீ வீட்டுக்கு போவாய்",என்றாள் திவ்யா.
சஞ்சனா அமைதியாக அஷ்வின்னை
கை காட்டினாள்.
"யாரு டி அந்த பையன்.ரொம்ப அழகா இருக்கான்.உன் லவ்வரா ",என்றாள்.
சஞ்சனா அதிர்ச்சி அடைந்தாள்.
"இல்லை அவன் ஜீவாவோட அண்ணன்.என்னை அழைத்துப் போக வந்து இருக்கான்",என்றாள்.
"ஓ அவ்வளவு தானா.வேறு ஏதும் இல்லையா",என்றாள் திவ்யா குறும்பாக.
சஞ்சனா கண்ணை உருட்டினாள்.
"சரி நேரம் ஆகுது உன்னவர் சாரி உன் டிரைவர் காத்துக் கொண்டு இருக்கிறார் நீ கிலம்பு",என்றாள் திவ்யா சிரித்துக் கொண்டே.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்
Teen Fictionதன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???