Episode........66
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இருவரும்....
கொஸ்டலில் இருந்து பொடி நடையாய்
பக்கத்தில்
உள்ள கோவிலுக்கு வந்து
சேர்ந்தனர்.....அப்போது....
கோவில் முன்னால்....என்னப்பா...
கட்டிக்போறவள்....
கூட வந்தால் எங்களை கண்ணுக்கு தெரியாத என்று...
யாரோ பின்னால் இருந்து கேட்கவும்...யார்டா...
அது தெரிந்த குரலாய் இருக்கே என்றவாறு
திரும்பி பார்த்தான்
வினோத்....அங்கே...
பூக்கடைகுள் இருந்த மீனாட்சிம்மா...
இவனை பார்த்து...
சிரித்தார்....வழமையாய்....
அவர் கடைக்கு பூக்கள் கொடுப்பது வினோத் தான்....
அவர் பெயர் மீனாட்சி....
எல்லோரும்
அவரை மீனாட்சிம்மா என்று அழைப்பதுண்டு....உடனே...
இரண்டு அடி எடுத்து வைத்து
அவர்
கடை முன்னே வந்த வினோத்....அம்மா...
அவள் என் பிரண்ட் என்று
சொன்னான் கூச்சத்தோடு....கட்டிக்கபோறவள்...
என்று...
அந்த அம்மா சொன்னதும்
வெட்கத்தில்
செக்க சிவந்த சுவேதா...
அவள்...
தன் பிரண்ட் என்று வினோத்
அந்த அம்மாவிடம் கூறவும்...
ஏன்டா...
உண்மையாய் சொல்லேன்...
கட்டிக்கபோறவள்தான் என்று...
மனசுக்குள்
செல்லமாய் கடிந்துகொண்டாள்....அவன்...
மனதில் என்ன இருக்கின்றது என்று
இவளுக்கு எப்படி தெரியும்...அட...
நான் கூட ஏதோ நினைச்சிட்டேன்
உங்க ஜோடி பொருத்ததை பார்த்து...
அவ்வளவு தானா...
மீனாட்சிம்மா...
பெருமூச்சு விடவும்...ஓஓ....
அவ்வளவுதான் நீங்க நினைக்கிற மாதிரி ஏதுமில்லை என்றான் வினோத்....
ஓரக்கண்ணால் சுவேதாவை பார்த்தவாறும்....அப்போது....
மீனாட்சி...
சுவேதாவை பார்த்து
என்னம்மா இப்படி அழகாய் சாறி உடுத்து
கோவில் வந்திருக்கிறாய்...
தலையில் ஒரு பூ கூட வைக்கல
என்றவாறு...
முன்னாலிருந்த ஒரு ரோஸ் நிற ரோஜாவை எடுத்து..
இந்தாப்பா....
அந்த பொண்ணுகிட்ட கொடு தலையில்
வைக்கட்டும்
என்று
வினோத் கையில் அந்த ரோஜாவை கொடுத்தார்.....
