*பாட்டி அடிக்கடி சொல்லுவார்*
*நீரால் கோலம் போடாதே
*நெற்றியைக் காலியாய் விடாதே
*குச்சியைக் கொளுத்தி வீசாதே
*இரவில் ஊசியை எடுக்காதே
*கால் மேல் காலைப் போடாதே*காலையில் அதிகம் தூங்காதே
*தொடையில் தாளம் போடாதே
*தரையில் வெறுதே கிடக்காதே
*மலஜலம் அடக்கி வைக்காதே
*நகத்தை நீட்டி வளர்க்காதே*ஆலயம் செல்லத் தவறாதே
*அதிகமாகப் பேசாதே
*எண்ணெய் தேய்க்க மறக்காதே
*சந்தியில் நீயும் உண்ணாதே
*விரிப்பைச் சுருட்ட மறக்காதே*பகலில் படுத்து உறங்காதே
*குளிக்கும் முன்பு புசிக்காதே
*ஈரம் சொட்ட நிற்காதே
*நாமம் சொல்ல மறக்காதே
*நல்ல குடியைக் கெடுக்காதே*தீய வார்த்தை பேசாதே
*நின்று தண்ணீர் குடிக்காதே
*எதையும் காலால் தட்டாதே
*எச்சில் பத்தை மறக்காதே"எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே"*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*
YOU ARE READING
தாத்தா பாட்டி கதைகள்
FantasyShort stories, one part one story.....எனக்கு என் தாத்தா பாட்டி கூறிய கதை, அறிவுரைகள், மருத்துவம்..... என் குழந்தைகளுக்கு என் தந்தை கூறிய கதை....