வினை அறுத்தல்

15 3 0
                                    

ரோஹித் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன்.
அவன் மிகவும் மூர்க்க குணம் கொண்டவன். வீட்டு விலங்குகள் துன்புறுத்தி மற்றும் சிறிய குழந்தைகளை வெறுப்பேத்தி அழ வைப்பான்.

அவனுடைய தாய் தந்தை அவனை எத்தனை முறை திட்டியும் அடித்தும் பார்த்துவிட்டனர். ஆனால் அவன் குணம் மாறவில்லை.

ஒரு நாள் அவன் தன் சைக்கிளில் பார்க்குக்கு சென்றான். அங்கே தன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கே ஒரு நாய்க்குட்டி குதித்து குதித்து ஓடிக் கொண்டு இருந்தது. அதை பார்த்ததும் ரோஹித் அதன் மேல் தன் பந்தை வீசினான். நல்லவேளை அது அந்த குட்டி மேல் படவில்லை. பக்கத்தில் விழுந்தது. அந்த நாய்க்குட்டி பயத்தில் குதித்து பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து விட்டது. மேலே வர முடியாமல் தவித்தது.

ரோஹித் அந்த நாய்க்குட்டி படும் அவஸ்தையை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான். அது சிறிய குட்டி என்பதால் அதன் குரல் சப்தம் யாருக்கும் கேட்கவில்லை. மேலும் அது பின் பக்கம் இருக்கும் வழியில் இருந்ததால் யாரும் அந்த பக்கம் செல்லவில்லை.

சிறிது நேரம் அந்த குட்டி படும் அவஸ்தையை பார்த்து விட்டு ரோஹித் அந்த குட்டியை வெளியே எடுத்து விடாமலே தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

அவன் செல்லும் போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக சென்றது. கார் சப்தம் கேட்டு மெயின் ரோட்டிலிருந்து மண் ரோட்டிற்கு இறங்கினான். அப்போது சைக்கிளின் பேலன்ஸ் மிஸ் ஆகி அங்கே இருந்த பள்ளத்தில் விழுந்து விட்டான். விழுந்த வேகத்தில் இடது கையில் அடிப்பட்டு விட்டது.

அவனால் மேலே எழுந்து வர முடியவில்லை. அவன் செல்போனும் கீழே விழுந்ததில் உடைந்து விட்டது. ஆன் ஆகவில்லை.

இருட்டாக தொடங்கி விட்டது. ரோஹித்துக்கு பயம் அதிகமானது. அவன் பள்ளத்தில் இருந்து கத்தினான்.... யாருக்கும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் அவஸ்தை பட்டான். பிறகு அந்த வழியாக ஒருவர் பைக்கில் சென்றார். அங்கிள் என்று சற்று சத்தமாக கத்தினான்.

அவருக்கு சப்தம் கேட்டு.... அவனை அந்த பள்ளத்திலிருந்து மேலே இழுத்து தூக்கி விட்டார். பின்னர் அவர் தன் ஃபோனை கொடுத்து அவனுடைய பெற்றோருக்கு பேச சொன்னார்.

அவனுடைய அப்பா வரும் வரை காத்திருந்து அவர் வந்ததும் கிளம்பி சென்றார். ரோஹித் மற்றும் அவனின் தந்தை இருவரும் அவருக்கு நன்றி கூறினார்கள்.

ரோஹித் சைக்கிளை தன் காரின் பின் பக்கம் கட்டி விட்டு வா தம்பி போகலாம் என்றார் அப்பா.

அப்பா.... என்றான்.

என்னப்பா....

பார்க்குக்கு போகலாம் ப்பா...

ஏன் இப்போ .... என்றார் அப்பா.

ரோஹித் நடந்தவற்றை கூறினான்.
அவன் செய்த தவறை எண்ணி வருந்தினான்.

பின்னர், அவனும் அவன் தந்தையும் பார்க்கிற்கு சென்று அந்த நாய்க்குட்டியை பள்ளத்திலிருந்து வெளியே எடுத்தனர்.

அது கத்தி கத்தி மிகவும் சோர்வாக இருந்தது.

அப்பா.... என்றான் ரோஹித்.

சொல்லுப்பா...

அப்பா.... நாமே இந்த நாய்க்குட்டியை வளர்க்கலாமா?... என்றான்.

தன் மகன் மனம் திருந்தியதை கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தார் அவனுடைய தந்தை.

சரிப்பா.... என்று கூறி அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு சென்றனர்.

ரோஹித் வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் அனைத்தையும் கூறினான்.

அவன் மனம் திருந்தியதை கண்டு அவரும் சந்தோஷம் அடைந்தார்.

அன்றிலிருந்து அவன் ஒரு நல்ல சிறுவனாக மாறிவிட்டான்.
அந்த நாய்க்குட்டியையும் பத்திரமாக பார்த்துக் கொண்டான்.
யாரையும் துன்புறுத்த கூடாது என்பதை அனுபவ பூர்வமாக அறிந்து கொண்டான்.

நீதி: வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

முற்றும்.

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

தாத்தா பாட்டி கதைகள்Место, где живут истории. Откройте их для себя