ஒரு ஊரில் ஒரு பாட்டியும் அவருடைய பேரனும் வாழ்ந்து வந்தார்கள்.
அந்தப் பாட்டி தனது கட்டை விரலில் ஒரு தங்க மோதிரம் அணிந்திருந்தார்.
அந்தப் பாட்டி தன் பேரனிடம், "நான் இறந்துவிட்டால் இந்த மோதிரத்தை எடுக்க மறந்து விடாதே. இது ஒன்றுதான் நான் உனக்காக வைத்திருந்த சொத்து" என்று கூறினார்.
"அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் பாட்டி, எனக்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை , எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் இன்னும் பல காலம் வாழவேண்டும்" என்று கூறினான்.
ஒரு வருடம் கழித்து அந்தப் பாட்டி இறந்து விட்டார். அந்த பேரன் பாட்டி சொன்னதை மறந்துவிட்டான் அவர்களின் குடும்ப வழக்கப்படி அந்தப் பாட்டியை சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
அன்று பயங்கரமான இடி மின்னல் மழை. வீட்டிற்கு வந்த பிறகுதான் பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது தன் காலத்திற்குப் பிறகு அந்த மோதிரத்தை எடுத்துக் கொள் என்று கூறினாரே என நினைத்தான்.
மழையினால் யாரும் வரவில்லை அவன் மட்டும் கடப்பாரையை எடுத்துக்கொண்டு தலையில் ஒரு கோணிப்பை போட்டுக்கொண்டு, டார்ச் எடுத்துக்கொண்டு சுடு காட்டிற்கு சென்றான்.
குழியைத் தோண்டி பாட்டியின் உடலை வெளியே எடுத்தான் அப்போது அவருடைய கட்டைவிரலில் இருக்கும் மோதிரத்தை அவிழ்க்க முடியவில்லை மிகவும் சிரமப்பட்டான் ஆனாலும் அந்த மோதிரம் அவர் கையை விட்டு வரவில்லை ஒரே இருட்டாக இருந்தது பயமாகவும் இருந்தது என்ன செய்வதென்று தெரியவில்லை எனவே அவன் வைத்திருந்த கத்தியில் பாட்டியின் கட்டை விரலை வெட்டி அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு பிறகு பாட்டியை மண்ணில் போட்டு மூடி விட்டான்.
பயத்துடனும் நடுக்கத்துடனும் வீட்டிற்கு வந்தான் அந்த மோதிரத்தை அவன் கட்டை விரலில் அணிந்து கொண்டான். பாட்டியின் புகைப்படத்தின் முன் நின்று அழுது கொண்டிருந்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது. அப்போது அவன் பயந்து கொண்டே போய் திறந்தான் அங்கு வயதான பாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார் ஆனால் அது அவனுடைய பாட்டி அல்ல.
"தம்பி, தாகமாக இருக்கிறது எனக்கு கொஞ்சம் தண்ணீர் தருவாயா" என்று கேட்டார் அந்த மூதாட்டி
"யார் நீங்கள் உங்களை நான் இந்த ஊரில் பார்த்தது இல்லையே?"
என்றான்
"நான் பக்கத்து ஊர்தானப்பா என் பேரனைப் பார்க்க வந்தேன், இருட்டில், மழையில் எனக்கு வீடு தெரியவில்லை"
"மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா?" என்றார் அந்த மூதாட்டி.
" சரி " என்று கூறி அவன் உள்ளே சென்றான் ஒரு சொம்பில் தண்ணீரை கொண்டு வந்து அந்த பாட்டியிடம் நீட்டினான்.
அந்த பாட்டி அந்த சொம்பை வாங்கும் பொழுது அவருக்கு கட்டைவிரல் இல்லை அதை பார்த்து பயந்த அந்தப் பையன்
"பாட்டி உங்களுடைய கட்டைவிரல் எங்கே?" என்றான்.
உடனே அந்த பாட்டி ஆக்ரோஷமாக சிரித்து "நீதானடா, வெட்டி விட்டாய்" என்றார்.
இவன் மயங்கி கீழே விழுந்தான்.
முற்றும்.
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
YOU ARE READING
தாத்தா பாட்டி கதைகள்
FantasyShort stories, one part one story.....எனக்கு என் தாத்தா பாட்டி கூறிய கதை, அறிவுரைகள், மருத்துவம்..... என் குழந்தைகளுக்கு என் தந்தை கூறிய கதை....