ஒரு ஊரில் ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லை. அவரும் ராணியும் அவர்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டினர். அப்போது ராணி மயங்கி விழுந்தார்.
ஒரு அசரீரி(வானில் தெய்வ குரல்) கேட்டது.
அசரீரி கூறியது,
மன்னா, நான் கூறப்போகும் இரண்டில் ஒன்று தேர்ந்தெடு....
* நூறு ஆண்டுகள் வாழக்கூடிய அறிவில்லாத மூடனான மகன் வேண்டுமா?
* பதினெட்டு ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய அறிவில் மற்றும் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய மகள் வேண்டுமா?
என்றது.
சிறிது நேரம் சிந்தித்து விட்டு மன்னர், "சிலகாலம் வாழ்ந்தாலும் எனக்கு எல்லா விதத்திலும் சிறந்து விளங்கக்கூடிய குழந்தை தான் வேண்டும்" என்றார்.
தாதாஸ்து (அப்படியே நடக்கட்டும்).
என்று கூறியது அசரீரி.
சில மாதங்களுக்கு பிறகு மகாராணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கியது.
மன்னர், அந்த அசரீரி சொன்ன விஷயத்தை மறந்தே விட்டார். தன்னுடைய மகள் அனைத்திலும் சிறந்து விளங்குவதை பார்த்து பேரானந்தம் கொண்டார்.
இளவரசிக்கு தோழிகளே கிடையாது. அவளுடைய தோட்டத்தில் இருக்கும் மாமரத்திடம் தான் அவளுடைய சந்தோஷங்களை தோழியிடம் கூறுவது போல் சொல்வாள். அம்மரத்தை சுற்றி சுற்றி விளையாடுவாள்.
வாட்பயிற்சி, வில் வித்தைகளில் என் அனைத்திலும் சிறந்து விளங்கினாள்.
இளவரசியின் பதினெட்டாவது பிறந்தநாள்....
வழக்கம் போல மகாராஜா மற்றும் மகாராணியுடன் கோவிலுக்கு சென்று வந்தாள். இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டுவிட்டு,
"தந்தையே நான் என் தோழி மாமரத்துடன் விளையாடப்போகிறேன்" என்றாள்.
STAI LEGGENDO
தாத்தா பாட்டி கதைகள்
FantasyShort stories, one part one story.....எனக்கு என் தாத்தா பாட்டி கூறிய கதை, அறிவுரைகள், மருத்துவம்..... என் குழந்தைகளுக்கு என் தந்தை கூறிய கதை....