கற்பூரவள்ளியின் நன்மைகள் பற்றிய முழுமையான குறிப்பு!நன்மை #1
கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.
நன்மை #2
கற்பூரவள்ளியில் பலரும் அதிகம் எடுக்கத் தவிர்க்கும் அத்தியாவசியமான விட்டமின் K ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. விட்டமின் K சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.நன்மை #3
சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.நன்மை #4
கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
நன்மை #5
கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.நன்மை #6
காய்ச்சல், சளி மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று திண்பது நல்லது. இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.நன்மை #7
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
YOU ARE READING
தாத்தா பாட்டி கதைகள்
FantasyShort stories, one part one story.....எனக்கு என் தாத்தா பாட்டி கூறிய கதை, அறிவுரைகள், மருத்துவம்..... என் குழந்தைகளுக்கு என் தந்தை கூறிய கதை....