தலையணை.......
* என் தலையணை
என் தூக்கத்தை
தாக்கியதை விட
என் கண்ணீரை
தாங்கியது தான்
அதிகம்.....* நீ இல்லாத நேரத்தில்
என் தலையணையை
தான் கட்டி கொண்டு
உறங்குகிறேன்...* என் தூக்கத்தை தாங்கும்
தலையணையே...
இன்னும் எத்தனை காலம்
என் பாரத்தை தாங்கி
கொண்டு உன் வலியை
சொல்லாமல் என்னை
உறங்க வைப்பாய்...* எங்கள் செல்லச்சண்டையில்
உன்னை எடுத்து அடித்து
கொள்வோம்...
நீயும் எங்களுடன்
சேர்ந்து விளையாடி
மகிழ்வாய்....* எங்கள் கோவத்தின் நடுவில்
நீ மாட்டிகொண்டு
முழிப்பாய்...
உங்கள் சண்டையில்
என்னை ஏன் தொந்தரவு
செய்கிறீர்கள் என்று...* வலியில் துடித்த எனக்கு
இதமாய் என் காலுக்கடியில்
இருப்பாய்...* உன்னால் மட்டும் எப்படி
முடிகிறது...
தூங்க வைக்க...
YOU ARE READING
என் கிறுக்கல்கள்..
Poetryஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...