_04_

71 17 21
                                    

வீட்டுக்கு வந்து தனது திறப்பினால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் உமாமா. சுவரில் தொங்கிய பெரிய கடிகாரம் அதிகாலை நான்கரை மணி எனக் காட்டி நின்றது.

பெருமூச்சுடன் அறைக்குள் சென்று வெளியே செல்லும் உடைகளைக் களைந்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். அஹ்மதும் முஹம்மதும் சலனமில்லாது தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

அவள் போகும் போது எழுதி வைத்து விட்டுப் போன குறிப்பு தான் வேஸ்டு. அஹ்மதின் தலையணைக்குப் பக்கத்திலிருந்த அதைச் சுருட்டிக் குப்பைத் தொட்டியில் போட்டவள், தானும் தூங்க ஆயத்தமானாள்.

ஆனால் தூக்கம் அவளை விட்டும் தொலைந்து முகவரியைக் கூடக் கொடுக்காமல் வெகு தூரம் சென்று விட்டிருந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.

அவள் சற்று முன் எதிர்பாராத விதமாகக் கண்ட முகம் நினைவில் வந்து துன்புறுத்தியது. பழைய காலத்துக்கு அழைத்தும் சென்றது.

அப்போது அவளுக்குப் பதினைந்து வயது. தரம் பத்தில் கற்றுக் கொண்டிருந்தாள். அவளது வகுப்பில் மொத்தமாக முப்பது பேர். அதில் பதினேழு பெண் பிள்ளைகள்.

இவளுக்கு இயற்கையாகவே அனைவருடனும் கலந்து கலகலப்பாகப் பழகும் சுபாவம். வகுப்பில் பெண்கள் எவரையும் விட்டு வைக்காமல் அனைவருடனும் நட்புடன் பழகினாள்.

ஆனால் வழமையாகவே எல்லோரையும் விட்டுச் சற்று ஒதுங்கித் தனியே அமர்ந்திருக்கும் ராபியாவுடன் மட்டும் அவள் கதைக்க எத்தனிக்கவில்லை. ஏனோ அவளுடன் பேசிப் பழகத் தோன்றவில்லை.

ஒரு நாள், விஞ்ஞானப் பாடவேளையில் மாணவர்களை ஆய்வு கூடத்துக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர், அனைவரையும் இருவரிருவராகப் பிரித்து வேலை கொடுத்தார்.

அதில் எதிர்பாராத விதமாக ராபியாவுடன் உமாமா இணைக்கப்பட்டு விட, வேறு வழியின்றி அவளுடன் கதைக்க வேண்டியதாகி விட்டது. ஆனால் அவள் நினைத்தது போல இருக்கவில்லை ராபியா.

நன்மைக்கு என...Where stories live. Discover now