_07_

65 11 21
                                    

உமாமாவின் வாழ்க்கை மீண்டும் பொழிவு பூண்டு அவளைத் தினமும் அகமகிழ வைத்தது. பரீட்சைகளைப் பற்றி அவள் பெரிதாக சிரமப்பட்டுக் கொள்ளத் தேவையிருக்கவில்லை. அவள் தான் எந்நேரமும் ஆர்வத்துடன் தேவையில்லாதவற்றையும் தேடிப் படிப்பவளாச்சே?

அறையிலிருந்த மற்ற இருவருக்கும் இலேசாகப் பாெறாமை எட்டிப் பார்க்க, தங்களுக்குக் கடினமானவற்றை வந்து அவளிடம் கேட்டுக் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். உமாமாவும் நன்மைக்கு என சொல்லிக் கொடுத்தாள்.

அடுத்த நாள் காலையில் பகலவன் மெல்ல எட்டிப் பார்த்த வேளை, புதிய தெம்புடன் விடுதியிலிருந்து தயாராகி, அதே நேரம் அங்கு வந்த இன்னொருத்தியுடன் வெளியே வந்து இருவரும் நடந்தனர்.

உமாமா எப்போதுமே எல்லா வேலைகளையும் உரிய நேரத்துக்குச் செய்பவள். தினமும் அரை மணித்தயாலத்துக்கு முன்பே வெளிக் கிளம்பி விடுபவள். அமைதியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

"ஹாய்! நான் அருளழகி" என்று அவளுடன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பெண் தனது கையை நீட்டிப் புன்னகைக்க,

"உமாமா" என்று பதிலுக்கு முறுவலித்தவள் நீட்டிய கரம் பற்றிக் குலுக்கினாள். அந்தக் குலுக்கலுக்கான அர்த்தம் அருளழகிக்குப் புரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

'நான் கை குலுக்கினதுக்காக உன்னோட நட்புப் பாராட்டுவேன்னு நினைக்காத. இது இந்த இடத்தோட மறந்துட வேண்டியது' என்று குரூரமாக மனதில் எண்ணிக் கொண்டாள் உமாமா. அவளுக்கு முன்பு வாய்த்த நட்பு அப்படியொரு மனப்போக்கை உண்டாக்கி விட்டிருந்ததே அதற்குக் காரணம்.

இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருக்க, உமாமாவுக்கு முன்னால் திடீரென்று ஒரு வலிமையான கை நீண்டது. கையிலொரு சிவப்பு ரோஜா!

கண்கள் கழன்று நிலத்திலுருண்டு விடுமளவுக்கு விழித்து நோக்கியவள் நீட்டப்பட்ட கைக்குச் சொந்தக்காரனைப் பார்க்கத் திரும்பினாள். அவள் அதுவரை கண்டேயில்லாத புதிய முகமொன்று தான் அவளுக்கு அங்கு தெரிந்தது.

நன்மைக்கு என...Where stories live. Discover now