Cover edit by: @Staraddixt17 *** நன்மைக்கென்று நினைத்து செய்த செயல் தீங்கானது... *** "ஐ ஹேட் யூ! என் கண் முன்னாடி நிக்காத"அவள் பல வருடங்களுக்கு முன் கூறிய வார்த்தைகள் இன்னும் உமாமாவுக்கு நன்கு நினைவிருக்கின்றன. அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும் அவற்றின் சுமை பாரியது. மனதை ஈட்டி போல் நுழைந்து குத்திக் கிழித்திட வல்லது. "என்னை நாய விடக் கேவலமாக நினச்சித் துரத்தினாளே? அவள விட நல்லாத் தான் நான் இப்போ இருக்கேன்" என்று நினைத்தது உமாமாவின் மனம்.