_12_

83 13 46
                                    

நேரத்துக்குச் சென்று தன் வேலைகளில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் உமாமா. வாட் ரவுன்ட் செல்ல வேண்டிய கட்டாயத்தில் பேரில் ராபியாவின் கட்டிலையும் தரிசிக்க வேண்டியிருந்தது.

ராபியா கண்ணயர்ந்திருப்பதை ஒரு தாதி மூலம் அறிந்து கொண்டவள் மெதுவாக அவ்விடத்தை அடைந்து புதிதாகப் பூத்திருந்த மலரைக் கைகளில் தூக்கினாள்.


பஞ்சு மெத்தை போல அவளது கைகளிலிருந்த அந்தப் பூவை முத்தமிட்டு விட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்தவள் தன்னிடத்தே திரும்பிச் சென்று விட்டாள்.

அவள் இங்கு பணிபுரிவது ராபியாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. தெரிந்தால்..? பேயறைந்தது போலாகி விடுவாள். தெரிந்து தானே ஆக வேண்டும்!

அதை நினைத்துச் சிரித்துக் கொண்டு தன் தொழிலே கண்ணாகச் செயற்பட்டாள். இரு முறை ஹஸன் வந்து தன் மனைவியை எட்டிப் பார்த்து விட்டுப் போனது விளங்கியது.

ஆனால் என்ன.. ராபியா விழித்ததும் அவளைச் சென்று பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள் உமாமா. ஒரு பெருமூச்சுடன் மீண்டும் அவ்விடம் சென்றாள்.

அவள் முகத்தில் உணர்ச்சியில்லை. புன்னகையோ, உதட்டுச் சுழிப்போ இல்லை. ஒரு மருத்துவருக்கே உரிய கம்பீரத்துடன் தனக்கென விதிக்கப்பட்டிருந்த கடமையைக் கச்சிதமாகச் செய்தாள்.

ராபியாவின் விழிகளைப் பார்த்துக் கதைத்தாள். விடயங்களை விளக்கினாள். ஆனால் இவள் சொன்னதில் அரைவாசியாவது அவள் மண்டையில் உரைத்திருக்குமோ என்னவோ?

உமாமாவையே வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்து அவள் சொல்வதைக் கேட்டும் கேட்காமலும் இருந்தவள் அடிக்கடி தலையைக் குனிந்து கொள்ளத் தயங்கவில்லை.

இப்படியொரு நாள் வருமென்று ராபியா கனவிலும் நினைத்திருக்கவில்லை. உலகிலுள்ள அத்தனை சங்கடங்களையும் அந்த சில நிமிடங்களில் ஒன்றாய்ச் சேர்த்து உணர்ந்தாள் அவள்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 28, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நன்மைக்கு என...Where stories live. Discover now