_06_

46 12 37
                                    

அடுத்த வருடம் இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் நோக்கோடு தூசி படிந்திருந்த புத்தகங்களை மீண்டும் புரட்டிப் பார்த்தாள் ராபியா. படிக்கவும் வேண்டும், ஆனால் அலுப்பாக இருந்தது. படிக்க நினைக்கும் போதெல்லாம் ஹஸனின் புன்னகை தழுவிய முகமே கண் முன்னே வந்து நின்றது.

தான் பல்லாயிரம் முறை மனதினுள் கற்பனை செய்து பிழை திருத்திச் சரி பார்த்து வைத்திருக்கும் அவனுடனான எதிர்காலம் அவள் விழித்திரையில் விரியும். புத்தகங்களும் பேனைகளும் நொடியில் மறைந்து அவளது கற்பனைக் கடல் மட்டுமே அலை எழுப்பி மனமெனும் கரையைத் தொடும்.

அவள் என்ன செய்வாள்? எங்கிருந்தோ வந்து காரணமேயில்லாமல் அவளது மனதை ஆக்கிரமித்துக் கொண்ட ஹஸனை என்ன செய்தும் அவளால் மறக்க முடியாது. தனக்கு எதிர்காலமென்று ஒன்றிருந்தால் அது நிச்சயமாக அவனுடன் தான் என்பதில் அவளுக்குத் துளியும் சந்தேகமில்லை.

ஒரு தெளிவான முடிவுடன் எழுந்தாள். அவள் மீண்டும் படிக்கப் போவதில்லை. கிடைத்திருக்கும் பெறுபேற்றை வைத்து ஏதாவதொரு பகுதி நேரப் பயிற்சிநெறியைத் தெரிவு செய்து படித்து விட்டுப் பிள்ளை குட்டி வளர்க்கத் தீர்மானித்து விட்டாள்.

அவளது வீட்டில் அவளும் ஒரேயொரு சகோதரியும் மட்டுமே. பணமும் இருந்ததால் தாராளமாக செல்லம் கொடுத்துப் பிள்ளைகளிருவரையும் கெடுத்து வைத்திருந்தனர் பெற்றோர். படிக்க வேண்டுமென்று கூறிய போது படியென்று சொன்னவர்கள் படிக்க முடியாதென்று கூறிய போதும் சரியென்று ஒப்புக் கொண்டது அதிசயமல்ல.

நாட்களை வீணே கடத்தினாள் அவள். உமாமாவின் பெறுபேறுகள் பற்றி அறிந்து கொண்ட போதிலும் அவளுக்காெரு வாழ்த்துக் கூறவாவது நா எழவில்லை. தன் துரோகத்தை எண்ணி உடல் குறுகி மனம் கூசியது. பழைய தோழியிடம் மன்னிப்புக் கேட்கவும் அச்சம் அவளுக்கு.

அவள் நினைத்தது போலவே ஏதோவொரு பயிற்சிநெறியில் இணைந்து படிக்கலானாள். ஹஸனோ பிடிவாதக்காரியான அவளுக்குப் புத்தி சொல்லி வேலையில்லையென்று தெரிந்ததால் வாய் பொத்தியிருந்தான்.

நன்மைக்கு என...Where stories live. Discover now