_08_

40 11 20
                                    

வாழ்க்கை சலனமில்லாது சென்று கொண்டிருந்த போது இடையில் வந்து நின்ற ஹஸனைப் பார்த்ததும் ராபியா பற்றிய எண்ணங்கள் எழ, மறந்திருந்த நினைவுகளை நெம்புகோல் கொண்டு கிளப்புவது போலிருந்தது உமாமாவுக்கு.

அணைந்து போகும் தருவாயில் அரை நம்பிக்கையோடிருந்த தீக்குள் எண்ணெய்யைப் பொழிந்தால் எப்படிப் பற்றி எரியுமோ அது போல, கடலெனும் மனதில் எண்ணங்களெனும் அலைகள் விண்மீன்களை எட்டிப் பிடிக்கப் போவது போல துள்ளியெழுந்தன.

பழைய நினைவுகளை வெகு சிரமத்தோடு ஓரங்கட்டி விட்டு முழுமூச்சாகப் படிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் உமாமா. வேறு என்ன செய்வது?

வாரத்தில் இரண்டு முறை வீட்டுக்குத் தொடர்பு கொண்டு கதைத்துத் தனது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயன்றாள். மாதத்துக்கு ஒரு முறை வார இறுதி நாட்களில் வீட்டுக்குச் சென்று வந்தாள்.

சில நாட்களில் மனதை உறுத்திக் கொண்டிருந்த அந்த விடயத்தை மறந்தும் போனாள். வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் தங்கள் சிறகுகளை விரித்துக் கொண்டு அவள் இதயத்தை வட்டமிடலாயின. தேனீக்கள் கூட தங்கள் வாயிலிருந்து தேனை அவள் தலையில் சொரிவது போன்றதொரு உணர்வு உண்டாயிற்று அவளுக்கு.

ராபியா பற்றி மறந்தே போனாள். தன்னைத் தூசை விடக் கேவலமாக மதித்து ஒதுக்கித் தள்ளியவளிடம் சென்று கெஞ்சிக் கொண்டிருக்கவும், அவளையே நினைத்துத் தன் மகிழ்ச்சியைத் தொலைக்கவும் ராபியா தகுதி பெற்றவளா என்ன?

பல்கலைக்கழக நாட்கள் தினமும் தித்திப்பை அள்ளிக் கொடுக்க, மனம் நிறைந்து போயிற்று அவளுக்கு. அவளது கனவு, ஆசை எல்லாமே இன்னும் சில மாதங்களில் நிறைவேறப் போகின்றன எனும் நினைவே குதிரைப் பந்தயத்தில் வெற்றிக் கயிற்றைத் தொடச் செல்பவனின் இதயம் போல அவளது இதயத்தையும் துடிக்கச் செய்தது.

வெளியே சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்து விடுபவள், பச்சைகளை இரசித்துக் கொண்டே தேநீரையும் உறிஞ்சியவாறு மந்தமான மாலை வெயிலுடன் நட்புக் கொள்ளும் பழக்கத்தை மட்டும் விடவில்லை.

நன்மைக்கு என...Where stories live. Discover now