1- நெஞ்சோடு கலந்தவளே

349 12 14
                                    

சிறு முன்னோட்டம் 

இது ஒரு தொடர் கதை... இக்கதையின் முதல் பாகத்தின் பெயர், ‘என்னவனே உனக்காக எல்லாம்’
(அக்கதையைப் பற்றி தெரிந்துக் கொள்ளாதவர்கள் அமேசான் கிண்டில் சென்று படித்துக் கொள்ளுங்கள்) ஏற்கனவே படித்தவர்கள் என்றால் இக்கதையில் தொடருங்கள்.
ஆனால் ஒன்று, இக்கதைப் புரிய வேண்டுமென்றால் இதன் முதல் பாகத்தை படித்துவிட்டு வாருங்கள்.
           தன்னவனுக்காக எதையும் செய்ய கூடியவள்... தீயவர்களால் சதியில் இருந்த தன்னவனுக்காக பல இன்னல்கள், துன்பங்கள் என பல கஷ்டத்தை கடந்து தன்னவனை கரம் பிடிக்கும் நேரத்தில், தன்னவனின் உயிர் காக்க தன் உயிரை மாய்த்துக் கொண்டவள்... அவள் நினைவில் வாழும் அவனின் மீதி வாழ்க்கை பயணத்தை இக்கதையில் காண்போம்.
இனி...

நெஞ்சமே-1

‘நான் அர்ஜுன் கிருஷ்ணன். இங்கே பல பேருக்கு என்னை தெரியும். சில பேருக்கு தெரியாது. என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என் மதுபாலாவை பற்றி தெரிந்திருக்கும்.

நான் வாழ அவள் இதயத்தை கொடுத்தவள். இப்பொழுது என்னுடைய இந்த வாழ்க்கை என் மதுவுடையது. அவளை தவிர என் வாழ்க்கையிலும் சரி, என் இதயத்திலும் சரி வேற யாருக்கும் இடம் இல்லை. 

ஆனால், அதை புரிந்துக் கொள்ளாத என் குடும்பம் இப்போது வேறு ஒரு பெண்ணை எனக்கு திருமணம் முடிக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கே தெரியபோகிறது. மது மட்டுமே இருக்கும் இதயத்தில் வேறு ஒருத்திக்கு இடம் இல்லையென்று. என் வாழ்க்கைக்குள் நுழைந்து அப்பெண்ணின் வாழ்க்கையும் வீணாக போகிறது. பாவம் அப்பெண். அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்த ஜென்மம் என் மதுவின் நினைவோடு முடிய போகிறது என்று.

என் நெஞ்சோடு கலந்தவளே என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி சென்றவள். அவளை என்னால் மறக்க முடியாது. மறந்தும் இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

மதுவின் ஆசைக்காக மட்டுமே இந்த கல்யாணம் என்னும் பந்தம். மற்றபடி அவளுக்கும் எனக்கும் எந்த பந்தமும் இல்லை’ என்று கண்ணாடி முன் நின்று யோசனையில் ஆழ்ந்தவனின் சிந்தனை, கதவு தட்டும் ஓசையில் நினைவுக்கு வந்தது.

நெஞ்சோடு கலந்தவளே(Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin