விலகாதே என்னுயுரே 💔💔

295 9 2
                                    

விலகாதே என்னுயுரே டீசர்

மனதை மயக்கும் மாலை வேளை மழை காலம் என்பதால் மேகம் கறுத்து இருந்தது. அடித்தும் ஊத்தும் மழை இல்லை தான் ஆனால் சாரலாக தூறி கொண்டு இருந்தது.  ஊட்டி மலைப்பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது. காரினுள் அமர்ந்து இருந்தவளோ சற்று கொஞ்ச நேரத்திற்கு முன்பு தன் கழுத்தில் ஏறிய இன்னுமும் ஈரம் கூட காயாத புத்தம் புது தாலியை கைகளில் எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள். அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் திரண்டு கீழே விழ காத்து இருந்தது. ஏன் இரண்டு சொட்டு நீர் கூட அந்த தாலியில் பட்டு தெறித்தது. அதை அருகில் இருந்தவன் அறியா வண்ணம் துடைத்து கொண்டாள்.

இந்த அழுகை நடந்த இந்த திருமணம் பிடிக்காததால் வரவில்லை. மனம் விரும்பியவன் கையாலே மாங்கல்யம் கழுத்தில் ஏறியதால் வந்த ஆனந்த கண்ணீர். பெற்றவர்கள் அருகில் இருந்து ஆசிர்வதித்து நடக்கவில்லை தான். ஆனாலும் இப்பொழுது அவள் மனம் கொண்ட மகிழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனால் அது கண்ணீராக வெளியேறுகிறது.

இந்த சந்தோஷத்தை தனக்கு அளித்த தன் காதல் கணவனை திரும்பி பார்த்தாள்‌. அவன் அமைதியாக மலைப்பகுதி என்பதால் மிக கவனமாக காரை  ஓட்டி கொண்டு இருந்தான். அவன் இப்படி அமைதியாக இருப்பவன் அல்ல. எப்போதும் லொட லொட வென பேசி கொண்டே இருப்பான். இன்று நடந்த சில நிகழ்வுகளால் சற்று கோவமாக இருக்கிறான் அதனால் இப்படி அமைதியாக வருகிறான். அதுவும் அந்த கோவம் தன் மீது இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.  கியர் மீது இருந்த அவன் இடது கையில் தன் கரத்தை வைத்தவள் என்னப்பா டென்ஷனா இருக்கீங்களா என்று கேட்டாள்.

ச்சே ச்சே அப்படி எல்லாம் எதுவும் இல்லாமா நான் ஏன் டென்ஷன் ஆக போறேன் என்று கூறினான் அவள் புறம் திரும்பி மெலிதாக சிரித்து, ஆனால் இந்த சிரிப்பு அவளுக்காக தான் கண்களில் தெரிந்தது கோவம். இப்போது அவன் மனதை மாற்றும் பொருட்டு அவள் பேச ஆரம்பித்தாள் டென்ஷன் இல்லையா, அப்ப சரி நான் கூட நீங்க டென்ஷனா இருக்கீங்க உங்க டென்ஷனை குறைக்கலாம் நினைச்சேன் என்றாள்.

எப்படி குறைப்ப என்று அவன் கேட்டதும். அவன் அருகே சென்று அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்து இப்படி தான் என்றாள். இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை இன்பமாக அதிர்ந்து அவளை பார்த்தான். அவள் தரும் முதல் முத்தம் காதலித்த இந்த இரண்டு ஆண்டுகளில் இவன் தான் பலமுறை அவளை முத்தமிட்டு இருக்கிறான். அதுவும் கன்னம் நெற்றி கைகளில் மட்டும் தான் இதழில் அனுமதி கிடையாது. கேட்டாலும் கூட அவள் தரமாட்டாள். இப்போது அவளாகவே தர அவனுக்கு சந்தோஷம் தான்.

காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் கைபிடித்து தன் அருகே இழுத்தவன்  இப்ப நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன் மேடம் என்று அவன் கூற மறுபடியும் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க போக. ம்ஹீம் இந்த டென்ஷன் கன்னத்தில் முத்தம் கொடுத்த போகாது லிப்ஸ்ல தரனும் அதுவும் டீப்பா என்றான். அதில் நாணம் எழந்தது குனிந்து அவனை பார்க்காது மாட்டேன் என்பது போல் தலை அசைத்தாள்
சரி நானே என் டென்ஷனை போக்கிறேன் என்றவன் அவள் கன்னம் பற்றி உனக்கு ஓகேவா என்று கேட்டான். இவள் நாள் அனுமதி தராதவள் திருமணம் முடிந்து கணவன் கேட்கும் போது மறுக்க மனம் இல்லாமல் தனது சம்மதமாக இமைகளை மூடினாள். அவன் அவளின் இதழை நெருங்கினான். அப்போது டமால் என்ற பெரும் சத்தம்.

மெல்ல கண்விழித்து சுற்றி  பார்த்தால் அவள் இருப்பது மருத்துவமனை என்பது தெரிந்தது. அவள் பக்கத்தில் இருந்த நர்ஸ் உங்களுக்கு ஒன்னும் இல்லாமா படுத்துங்கோங்க என்றார். என்ன நடந்தது நான் எப்படி இங்கு வந்தேன் என்று கண்மூடி யோசிக்க நடந்தது நிழற்படமாக ஓடியது. அவர் எங்க நர்ஸ் என் புருஷனை எங்க. அவருக்கு ஒன்னும் ஆகலையே என்று பதட்டமாக கூறி எழ பார்க்க முடியவில்லை.

அந்த நர்ஸ் எமோஷனல் ஆகாது அமைதியா இருங்க. உங்க ஹஸ்பண்ட் வெளியே தான் இருக்கார். அவருக்கு ஒன்னும் இல்லை நான் கூப்பிட்டு வரேன் என்று சொல்லி வெளியே போனார். தன்னவனுக்கு ஒன்றும் இல்லை என்றதும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கதவை திறந்து கொண்டு வந்தவன் அவள் அருகில் வந்து அவளை அணைத்து உனக்கு ஒன்னும் ஆகாதும்மா, நான் ஆக விடமாட்டேன் என்று தலையில் முத்தமிட அதிர்ந்து போனாள். ஏனெனில் அது அவள் கணவன் இல்லை. அவனை தள்ளி விட்டு கன்னத்தில் அறைந்து யார் நீ என்று கேட்க.

உன் புருஷன் என்று கூறினான்.

தொடரும்...

விலகாதே என்னுயுரே 💔💔Where stories live. Discover now