4

313 58 7
                                    

🧡 இறைவனின் முடிச்சு

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

🧡 இறைவனின் முடிச்சு...🧡

K💞M

அவள் காத்திருப்பதை அறியாமல்... ரெண்டு டீ.. ரெண்டு சமோசா... அவளை கேட்காமல் ஆர்டர் செய்தான்...

திரும்பியவன்..
அப்புறம் Miss.. என்றவன்..
இடையில் நிறுத்தி
Miss தானே என்றான்...

முறைத்தபடி ஆமாம் என்றாள்...

ஆமாம்...உங்க பேரையே நீங்க சொல்லலையே  என்றான்...

பேர் கூட தெரியாமலேயே... ஹாஸ்பிடல்ல என் புருஷன்னு  சொன்னிங்களா..??என்றாள் கோபத்துடன்...

ப்ளீஸ்.. Calm down...
உங்களுக்கு விவரமா சொல்ல தான்... என் வேலையெல்லாம் விட்டுட்டு முன்ன பின்ன தெரியாத உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கேன்... என்றான்..

இன்னும் கோபத்துடன் அவனை முறைத்தபடியே இருந்தவளை பார்த்தவன்....

உனக்கு இது தேவையாடா...?
யாரோ எப்படியோ போறாங்கனு உன் வேலைய பாத்துட்டு போய் இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் உனக்கு வந்து இருக்குமா...??

வேலியில போற ஓணானை எடுத்து இடுப்புகுள்ள சொருகிட்டு குத்துதே குடையுதேனு இப்போ வருத்த பட்டு என்ன?ஆக போகுது..

இதெல்லாம் உனக்கு தேவை தாண்டா.. ஏற்கனவே உனக்கு நேரம் சரியில்லை.. இதுல இது வேற..
என்று தன்னையே வசை பாடி கொண்டிருந்தான்...

ஏங்க சொல்ல வந்தத சொல்லிட்டா.. நான் பாட்டுக்கு கிளம்பி போவேன்.. என்று அவள் படபடக்க

நிகழ் உலகிற்கு வந்தவன்....

அ......து என..
ஏதோ சொல்ல வாய் எடுத்தவன்...
ஆர்டர் செய்த சமோசா வர... இதை சாப்டுட்டு சொல்லவா...?ரொம்ப பசிக்குது என்றான்..

இறைவனின்💞முடிச்சு Where stories live. Discover now