💚🤍 இறைவனின் முடிச்சு...🤍💚
K💞M
எதிர் பாராத வேளையில் விழுந்த அறையில் நிலைதடுமாறி போனாள் முல்லை💞
வலியின் தீவிரம்...
அவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் உணர்த்தியது...கன்னத்தை ஒரு கையில் தாங்கி இன்னமும் நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்..
கதிர் ஆத்திரம் சிறிதும் குறையாமல் கண்கள் சிவக்க நின்றிருந்தான்..
அவனின் இந்த செயலால்..செந்தில் பத்மா இருவரும் அதிர்ச்சியில் திகைத்தனர்...
அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்பது அவன் கை முஷ்டியை இறுக்கமாக மூடி இருப்பதிலேயே தெரிந்தது...
கதிர் இப்படி பட்டவன் இல்லையே.. பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்பவன்...
ஓரிரு நாட்களே தெரிந்த
முல்லை💞யிடம் இப்படி நடந்து
கொண்டதிலேயே அவன் நின்று போன தன் திருமணத்தால் எந்தளவு பாதிக்க பட்டிருக்கிறான் என்பது புரிந்தது..கதிர் Pls Control Your Self என்ற செந்திலின் குரலால் தன்னிலைக்கு வந்தவன்... வேகமாக தரையை உதைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினான்...
நின்ற இடத்திலேயே மடங்கி அமர்ந்த முல்லை 💞முழங்கால்களுக்குள் முகம் புதைத்தாள்..
அவளுக்கு தேவையான தனிமையை தர செந்திலும் பத்மாவும் அங்கிருந்து அகன்றனர்...
மாலை நேரம்.. இருள் தொடங்கும் நேரம்..காற்றில் ஈரப்பதம் சற்று அதிகமாக தெரிந்தது....
மழை வருமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது..லேசான குளிரால் சேலையை போர்த்தியவாறு...
மொட்டை மாடியில்
மேகக்கூட்டங்களை
பார்த்தபடி இருந்தாள் முல்லை💞