💜 இறைவனின் முடிச்சு...💜
TTR....அவனிடம்
உங்க Wife Sir என்றதும்..
திகைத்து போய்...Sir நீங்க வேற யாரோ..!!ன்னு நெனைச்சி என்கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன்....
என்றான் கதிர்..கூபேல Travel பண்ணது நீங்க தானே.. எனக்கு இன்னும் அவ்வளவு எல்லாம் நியாபகமறதி இல்ல sir என்று சிரித்தார்...
ஒன்றும் புரியாமல் குழம்பியவனை மேலும்...
உங்களுக்கு தலையில ஏதும் அடிபட்டு இருக்கா Sir...என்றார்.
கதிர் ஏதோ சொல்ல வாய் எடுக்கும் தருணம்...
பணியாளர் ஒருவரிடம்... இவர் தான் அவங்க Husband கூட்டிட்டு போங்க என்று கை காட்டினார்...
இவங்க கிட்ட சொல்லி பிரயோஜனம் இல்ல.. நேர்ல போனா அந்த பொண்ணே சொல்லிட போறா.. நான் அவ புருஷன் இல்லனு அப்புறம் என்ன? என்று அந்த பணியாளர் பின்னே நடந்தான்...
இருவரும் அந்த பெண் அனுமதிக்க பட்ட வார்டில் நுழைந்தனர்... அவளை சுற்றி நர்ஸ்கள் குழுமி இருந்தனர்...
சிறிது நேரம் முன்பு தான் மயக்கம் தெளிந்தவள்....
அவர்கள் மத்தியில் மலங்க மலங்க பார்த்தபடி நடுவில் அமர்ந்து இருந்தாள்...
சிஸ்டர் இந்த பொண்ணோட ஹஸ்பண்ட கூட்டிட்டு வந்துட்டேன்... என்று கதிரை கூட்டிட்டு வந்தவன் கூற.. அனைவரும் திரும்பினர்..
அப்போது கதிர் அவர்களின் மத்தியில் அமர்ந்து இருந்தவளை பார்த்தான்...
தன் கூட பயணித்த அதே பெண்....
தன் மனைவி பெயரில் ரிசர்வ் செய்த டிக்கெட்டை இவளுக்கு விட்டு கொடுத்ததால் ஏற்பட்ட குழப்பம் என்பதை இப்போது தான் உணர்ந்தான் கதிர்...