💛 இறைவனின் முடிச்சு... 💛
K💞M
கதிர் கோவமாக பைக் எடுத்து கொண்டு போனது தெரிந்ததும் வீட்டுக்குள் வந்தவள் என்ன?செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி அமர்ந்தாள்..
பின்பு யோசனை வந்தவளாய்.. போனை எடுத்து அவசரமாக அவனுக்கு Call செய்தாள்.. Full Ring போய் Cut ஆனது...
சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்ய அதே பதில்..
சரி கோவம் தணிந்து எப்படியும் வந்து விடுவான் என்று தன்னையே சமாதானம் செய்தவள்...
வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க தொடங்கினாள்... அவ்வப்போது அவன் வருகையை எதிர்பார்த்து வாசலில் பார்த்த வண்ணம் இருந்தாள்....
இரவு உணவையும் சமைத்து முடித்து விட்டாள்.... இன்னும் அவன் வீட்டிற்கு வந்தபாடில்லை....
நேரம் ஆக ஆக அவளுக்கு பயம் தொடங்கியது.. பயத்தில் பசியும் எடுக்க வில்லை சாப்பிடவும் மனம் இல்லை...
தவித்தபடி வாசலை பார்த்து உட்கார்ந்து இருந்தாள்.. மணி பத்தாகும் போது திக் திக் என்றிருந்தது...
அதற்கு மேல் அவளை தவிக்க விடாமல்.. ஒரு வழியாக 11 மணிக்கு வந்து சேர்ந்தான்..
வந்தவன் நேராக அறைக்கு சென்றான்... அறைக்கதவின் மேல் Sorry என்று எழுதியிருந்தாள்...
ஏற்கனவே சிறிது கோபம் தணிந்தவன் அதை பார்த்ததும் லேசாக மனதின் ஓரத்தில் புன்னகைத்து கொண்டான்...
Sorry கதிர்..
ம்ம்ம்.. பரவாயில்ல...
Fresh ஆகிட்டு வாங்க.. சாப்பிடலாம்..
என்று மேஜை மீது தட்டை எடுத்து வைத்தாள்....