💖 இறைவனின் முடிச்சு...💖
K💞M
அந்த பேருந்து... சென்னையை நோக்கி...வேகமாக பயணித்து கொண்டிருந்தது...
இருக்கையில் அமர்ந்தபடி...
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கதிர்...அவன் அருகே ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தவளுக்கு தான் உறக்கம் வரவில்லை....
ஜன்னலுக்கு வெளியே இருட்டில் வெறித்து பார்த்து கொண்டிருந்த அவளின் மனம் அலை கடலென ஆர்ப்பரித்து கொண்டிருந்தது...
முன் பின்... தெரியாத யாரோ!! ஒருவனோடு...இப்படி பயணம் செய்வது சரியா..? தவறா..? என்று மனம் பட்டிமன்றமே நடத்தியது...
அதுவும் உலகம் இருக்கும் இருப்பில்..பழகியவர்களையே நம்ப முடியவில்லை... என்னென்னவோ நாட்டில் நடக்கிறது...
எத்தனையோ தினம் தினம்
செய்தித் தாளில்.. தொலைக்காட்சியில் வருகிறது.... எல்லாம் தெரிந்தும் தான் இப்படி செய்வது சரியா?? என்ற கேள்வி அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது....அவள் மனம் சில மணி நேரம் பின்னுக்கு சென்று நடந்தவைகளை அசை போட தொடங்கியது...
தன் முன்பு அமர்ந்து...அழுபவளை என்ன சமாதானம் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் பரிதவிப்போடு பார்த்து கொண்டிருந்தான் கதிர்..
தன்னை மீறி கன்னம் தாண்டிய கண்ணீரை அவசரமாக துடைத்தவள்...லேசாக புன்னகைத்து Anyway அவமானத்துல இருந்து காப்பாத்துனதுக்கு ரொம்ப Thanks and Also Thank for Snacks & Tea என்று சொல்லிவிட்டு எழுந்தவள்...வேகமாக Restaurant விட்டு வெளியேறினாள்...