💜🤍 இறைவனின் முடிச்சு...🤍💜
K💞M
அந்த Restaurant -ல் பத்மாவும்... முல்லை💞யும்... எதிர் எதிராக அமர்ந்திருந்தனர்...
ஆர்டர் செய்த Coffee -யை பருகி முடித்து....நீண்ட நேரம் காத்திருந்தவள்..பொறுமை தாங்காது....
என்ன? பத்மா.. ஏதோ பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு அமைதியாவே இருக்கே...என்று உதட்டை kerchief எடுத்து துடைத்து கொண்டாள்....
ம்ம்ம்..அதுவா...என்று குடித்து முடித்த காபி கப்பை டேபிளில் வைத்தாள்...
நீயே சொல்லுவேனு பார்த்தேன்...
நீதான் அழுத்த காரி ஆச்சே... எப்டி? சொல்லுவே...எனக்கு புரியல பத்மா... நீ என்ன? சொல்றேன்னு..
சரி நான் நேராவே கேக்குறேன்...
நீ...
கதிர் அண்ணாவ.. லவ் பன்றியா!!?சட்டென்று அவள் கேட்டதும்..எப்படி? அதை எதிர் கொள்வது என புரியாமல்... தடுமாறினாள்...
அ.....து....அது வந்து....
கதிர் அண்ணா Marriage நின்னு போனப்போ நான் எவ்ளோ வருத்தபட்டேன்னு தெரியுமா???
அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு வேண்டிகிட்டே இருந்தேன்...
கதிர் அண்ணா..வ கட்டிக்க அந்த பொண்ணுக்கு தான் கொடுத்து வைக்கல...
அவரோட குணத்துக்கு தகுந்த மாதிரி நல்ல பொண்ணா அமையணும்னு நானும் செந்திலும் ரொம்பவே ஆசைபட்டோம்.
அது நீயா இருந்தா.. நிச்சயமா நாங்க சந்தோஷப்படுவோம்....
சொல்லு...முல்ல 💞