💙💜 இறைவனின் முடிச்சு.. 💜💙
K💞M
அந்த ஹோட்டல் வாசலில் நின்ற காரிலிருந்து..செந்திலும் பத்மாவும்
இறங்கினர்..திரும்பி காருக்குள் பார்த்தவள்...
ஹேய்!! முல்ல💞 இறங்கி வா...என்ன?யோசிக்கிற...என்றதும்...மெதுவாக..முல்லை💞 இறங்கினாள்..
மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஹோட்டல் பார்க்க மிக அழகாக இருந்தது...
பத்மா, முல்லை 💞இருவரும் ஒரே மாதிரியான.. வேறு வேறு நிறத்தில் உடை அணிந்து இருந்தனர்...
இந்த Dress போட மாட்டேன்னு சொன்னியே.! எவ்ளோ சூப்பரா இருக்கு பாரு...
எல்லாரும் உன்னை ஒரு தரம் திரும்பி பார்த்துட்டு போறாங்க...
போ.. பத்மா எனக்கு இந்த Dress என்னமோ ஒரு மாதிரி இருக்கு..
இந்த மாதிரி Dress தான் வட இந்திய முறைப்படி நடக்குற கல்யாணத்துக்கு அதிகம் போடுவாங்க...
உனக்கு இந்த Dress ரொம்ப அழகா இருக்கு...சரி வா என்று அவள் கைகளை பிடித்து கூட்டி போனாள்..
செந்திலின் நண்பன் திருமணத்திற்கு முதலில் வர மறுத்த முல்லை💞...
செந்தில் கதிர் இருவரும் ஒரே ஆபீஸ் தானே...அப்போ கதிருக்கும் invitation கொடுத்து இருப்பாங்களே..
கதிரும் வர வாய்ப்பிருக்கே என்ற ஆர்வத்தில்...சரி வரேன் என்று ஒத்துக்கொண்டாள்..
அந்த நட்சத்திர ஹோட்டல் வண்ண விளக்குகளால் அலங்காரமாக இருந்தது....மிகப்பெரிய புல்வெளி அரங்கில் ஆங்காங்கே வட்ட மேஜை போடப்பட்டு.. சுற்றிலும் நாற்காலிகள் இருந்தன..