💙 இறைவனின் முடிச்சு... 💙
K💞M
வாங்க..ண்ணா
வாங்க...என்ற பத்மாவின் குரலுக்கு...என்ன...ம்மா வரவேற்பு பலமா இருக்கு என்றபடி காலணியை வாசலில் விட்டு உள்ளே வந்தான்...
நீங்க ஒரு help பண்ணணுமே என்றவளை..
சும்மா இரு பத்மா.. என்று ஏதோ சொல்லி முல்லை💞 தடுப்பதை பொருட்படுத்தாது..
கதிரிடம் பத்மா விவரங்கள் அனைத்தும் சொல்லி..நானும் செந்திலும் பத்து நாளைக்கு ஊருக்கு போறோம்..ண்ணா.
நீங்க முல்லை 💞க்கு துணையா இங்கே தங்குறீங்களா..??என்றாள்.
கதிர்..சற்றே யோசித்தவாறு திரும்பி
முல்லை💞யை பார்த்தான்...
அவளுக்கு அதில் சம்மந்தம் இல்லாதது போல் அமைதியாக திரும்பி நின்றாள்...அவளுக்கு தான் இங்கு தங்குவது பிடிக்கவில்லை என்று புரிந்தது..
அண்ணா என்ன?யோசிக்கிறீங்க...
அ..........து!
அவ ஊருக்கும் வர்ற மாட்டேங்குறா!! அதான் கொஞ்சம் help
பண்ணுங்க ண்ணா....மறுக்க முடியாமல் சரி என்றான்...
அப்..பா இப்போ தான் நிம்மதி என்று பெருமூச்சு விட்டவள்....
இங்க பாரு முல்ல 💞 நீ ஸ்கூலுக்கு போக வர பக்கத்துல ஆட்டோ காரர் அண்ணா ஒருத்தங்க இருக்காங்க... அவர் கிட்ட சொல்லிடறேன்...
ஸ்கூலுக்கு ஆட்டோல போய்டு... பஸ்ல போய் சிரமபடாதே... என்று சொல்லியவாறு ஊருக்கு போக தேவையானவற்றை எடுத்து வைக்க உள்ளே சென்றாள்...