3

399 25 7
                                    

காஞ்சிபுரம் கே.என்.ஆர். பொறியியல் கல்லூரி, இரண்டாமாண்டு கணினி அறிவியல்.

"ஏய் கீர்த்தி.. நாளைக்கு நம்ம ஆடிட்டோரியம்ல ஜாவா செமினார் நடக்குதாம்.. நாமளும் போவோமா?"

"ப்ச்.. எனக்குத் தூக்கம் தூக்கமா வரும்! இவனுங்க குடுக்கற டீக்கும் பிஸ்கட்டுக்கும் மூணு மணிநேரம் அங்க உக்காரணுமா?"

தோழியோ ஒரு குறும்புச் சிரிப்புடன், "உன் மாறன் தான் அங்க ப்ரெசண்ட் பண்றானாம்.." என்க, எழுந்த பூரிப்பை மறைக்கச் சிரமப்பட்டாள் கீர்த்தி. "நிஜமாவா??"

"நான் ஏன் பொய் சொல்லப்போறேன்..? நோட்டீஸ் போர்ட்ல பாரு, தெளிவா எழுதியிருக்கே.. மாறன் செகண்ட் இயர் ஐ.டி. இப்ப சொல்லு.. போவோமா?"
.

மறுநாள் அழகான வாடாமல்லி நிற குர்த்தி அணிந்து அதற்கேற்ப அலங்காரமும் செய்துகொண்டு நேரமே வந்து முதல் வரிசையில் கீர்த்தி காத்திருக்க, சிரித்துக்கொண்டே வந்து அருகில் அமர்ந்துகொண்டனர் அவளது தோழிகள்.

கருத்தரங்கம் ஆரம்பித்து முன்னுரைகள் முடிந்து அடுத்ததாக மாறன் பேசப்போவதாக அறிவிக்கப்பட, வெளிர்நீல முழுக்கை சட்டையும் அதன்மேல் அடர்நீலத்தில் கோட்டும் அணிந்த ஆறடி இளைஞன் துள்ளலுடன் படியேறி மேடைக்கு வர, கீர்த்தியின் கண்கள் இமைக்க மறந்து அவனது முகத்தின்மீதே தங்கிவிட்டன.

சுமார் நான்கு மாதங்களாய் மாறனை சைட் அடிப்பதற்காகவே கல்லூரிக்கு வந்துபோகும் அளவிற்கு அவன்மீது பைத்தியமாக இருந்தாள் அவள். இத்துணை அழகனை ஏன் முதல் வருடத்திலேயே கவனிக்கவில்லை என்று தினமும் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

இரண்டாம் வருடக் கல்வியாண்டு தொடங்கிய முதல் நாள் அவனைப் பார்த்தாள் கீர்த்தி.

'ஃப்ரெஷ்ஷர்ஸ் டே' என்ற பெயரில் கல்லூரிகளுக்குள் தொன்றுதொட்டு நடக்கும் ராகிங் நிகழ்வுகளை பார்த்து ரசித்தபடி கீர்த்தியும் அவளது தோழிகளும் கல்லூரி வளாகத்தைச் சுற்றிக்கொண்டிருக்க, மைய வளாகத்தை அடுத்த பூங்காவின் அலங்காரப் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தைப் பார்க்க நேரிட்டது. நான்கைந்து மாணவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தான் அவன். நிறமற்ற ஏவியேட்டர் குளிர்கண்ணாடியும், ஐந்திலக்கத்தில் விலை கொண்ட பாதணிகளும், ப்ராண்டட் லெவிஸ் சட்டையும் ஜீன்சும் அணிந்த ஆணழகன். புதிதாய் வந்த மாணவர் மாணவிகள் பயத்தோடு எதிரில் நின்றிருக்க, கொஞ்சமும் இரக்கமின்றி மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்து சிரிக்க, இவனோ எதையும் கண்டுகொள்ளாமல் தன் ஐஃபோனில் கட்டைவிரல்களைத் தேய்த்துக்கொண்டிருந்தான் தன்பாட்டில். கீர்த்தி அவனைக் கண்டதுமே மையலில் விழுந்துவிட்டாள்.

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now