தாரகை 1

86 4 0
                                    

நடுவானில் நின்றிருந்த மஞ்சள் நிற ஆதவன் தன் நெருப்பு பார்வையை முழுவதுமாக பூமி மீது செலுத்தி கொண்டிருந்தான்...

அந்த கடும் வெப்ப நிலையிலும் வானில் காயும் கதிரவணை பொருட்பட்டுத்தாமல் எப்போதும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகரில் பல வானுயர்ந்த கட்டிடங்களில் இதுவும் ஒரு கட்டிடமாக அமைந்திருந்தது பிரசாத் குரூப் ஆப் ஹெர்பல் கம்பெனி...

சுற்றிலும் கண்ணாடியால் ஆன நவீன வசதிகளுடன் அமைந்திருக்கும் ஒரு வெள்ளை நிற அறையில் சிறு துரும்பு கூட அசையாமல் அந்த இடமே நிசப்தத்தில் மூழ்கியிருந்தது...

மிக பிரம்மண்டாமான அந்த அலுவலகத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த சில பணியாட்கள் அனைவரின் முகமெங்கும் பயம் படர்ந்திருந்தது அவர்கள் அருகில் அமர்ந்திருந்த நபரை கண்டு...

அந்த அறையின் ஒரு பெரிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு தன் கையில் இருக்கும் பைலை பொறுமையாக திருப்பி பார்த்து கொண்டிருந்தவன்,
கம்பிரமான தோற்றத்துடனும் அளவெடுத்து வைத்ததை போன்ற உடலமைப்பை உடையவனாகவும் அமர்ந்திருந்தான்...

பார்த்ததும் எவரும் எளிதில் கண்டு பிடித்து விடலாம் அவன் ஒரு கோபக்காரன் முரடன் என்றும்...

கருப்பு நிற கோர்ஷூட் அணிந்திருந்தவனின் முகத்தோற்றம் இரும்பினை போல் இறுகியிருந்தாலும் கண்ணிமைக்காவண்ணம் செதுக்கிய சிலையை போல் சிவந்த முகமாக அழகிற்கே உரியவனாகவும் அமர்ந்தந்திருந்தான் அவன்..

சில கணங்களுக்கு பின் சட்டென்று அருகில் இருந்தவர்களை கோபக் கணலில் முறைத்தவன் "என்ன நினைச்சிட்டுருக்கிங்க நீங்க எல்லோரும்........உங்களால இந்த சின்ன ஒர்க்ககூட ஒழுங்கா செய்ய முடியாதா.......இது எவ்வளவு இம்போர்ட்டண்ட்டான ப்ராஜெக்ட் தெரியுமா...இது ஆப்பீசா இல்லை வேற ஏதாவதா...?..என்று அவர்களை நோக்கியவன் மீண்டும் தொடர்ந்தான்...

இவ்வளவு கேர்லசான ஒர்க்கர்ஸ் என் கம்பெனிக்கு தேவையே இல்லை... இப் சம்திங் லைக் திஸ் கோஸ் வ்ரோங் அகைன் ..யூ கேன் நாட் ஒர்க் ஹேர்....
மைண்ட் இட்.." என அவன் சத்தமாக கர்ஜிக்கவும் அங்கு மென் மேலும் நிசப்தம் நிலவியது.....

தாரகை Where stories live. Discover now