அவள் அந்த ஆசிரியரை பார்க்க அவரோ விக்னேஷுடன் நின்று பேசிகொண்டிருந்தார்.. நீண்ட நாட்களுக்கு பின் அவனை கண்டவள் அதிர்ந்தாள்..அந்த ஆசிரியர் விக்னேஷ் செயலுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருந்தார்..விக்னேஷ் அபிநயனை கொள்ள ரவுடிகளை ஏற்பாடு செய்திருக்க..
மாணவர்கள் போல் வந்து அவர்கள் அபிநயனை கொள்ள திட்டம் தீட்டியிருந்தனர்...அவன் அதிலிருந்து தப்பித்து விட்டால் அவனுக்கு லேபில் கரண்ட் ஷாக் வைக்க திட்டமிட்டு கொண்டிருந்தான் விக்னேஷ்..இது அனைத்தையும் அந்த ஆசிரியரிடம் கூறியவன் சத்தமாக நகைத்தான்..இதை கேட்டு கொண்டு நின்ற ஜானவி அதை கேட்டு அதிர்ந்தவள் விழியில் கண்ணீர் தேங்கியது..
கையில் இருந்த புத்தகங்கள் சரிந்து கீழே விழவும்...... அந்த சத்தம் கேட்டு அவர்கள் யாரென பார்க்க ஜானவியோ அங்கிருந்து ஓடி ஓரிடத்தில் ஒளிந்து கொண்டாள்..அவர்களும் யாரும் இல்லாததை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..
மறுபுறம் அபிநயன் சண்டையிட்டு கொண்டிருக்கும் மாணவர்களிடம் பேசிக்கோண்டிருக்க அவர்கள் அவன் பேச்சை கேட்பதாக ... சில ரவுடிகள் சில மாணவர்களை லேபிள் வைத்து அடிப்பதாக கூற அவனும் கோபமுடன் அங்கு நகர்ந்தான்.
அவன் அந்த கதவின் அருகில் செல்லும் முன் அவன் கரம் பற்றி ஜானவி தன்னுடன் இழுத்து கொண்டு செல்ல அவன் பை வேகமாக அந்த கதவில் விழுந்தது...
விழுந்த அடுத்த நொடியே அந்த கதவு வெடிக்கவும் அவர்கள் இருவரும் அங்கிருந்து சற்று தூரம் சென்று விழுந்திருந்தனர்..
அபிநயன் அதிர்ச்சியுடன் அங்கு நடப்பதை பார்த்தவன் ஜானவியையும் பார்த்தான்..
சில நிமிடங்களில் இருவரும் நிதானித்து கொண்டு எழுந்து நிற்க
ஜானவி அவன் முகத்தை தன் கரத்தால் பற்றியவள் அவன் நலமா என உறுதி செய்து கொள்ள இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு நின்றனர்...