அவன் தன் தந்தையின் சொல்லிற்க்காக மட்டுமே ஜானவியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தவன் விருப்பம் இல்லாமல் தன் தந்தையின் கையிலிருந்த குங்கமத்தை வாங்கி ஜானவியின் நெற்றியில் சூடினான்...
ஷேகரும் பிரசாத்தும் இன்பம் பொங்க தங்கள் பிள்ளைகளை பார்த்து கொண்டிருக்க ஷேக்கர் விழிகளில் மகிழ்ச்சியின் நீர் துளிர்த்தது...
பிரசாத் நிம்மதி பெருமூச்சு விட்டவர் "ஷேகர் நீ இனிமே ஒன்னும் கவலை பட வேண்டாம் ஜானவி என் மருமகள்... அவள என் பொண்ணு மாத்திரி பாத்துக்குறேன்.... நீ எதுவும் வருத்தப் படவோ கவலை படவோ வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார் பிரசாத்...
ஜானவியின் விழிகள் முத்துக்களை துளிர்க்க அவளால் அவள் மன நிலையை சிறிதும் உணர முடியவில்லை...
அபிநயனோ சொல்ல முடியாத துயரத்துடன் அவளை பார்த்தவன் பார்வையின் வெப்ப அனலை தாங்க முடியாமல் நின்றிருந்தவள் வாழ்நாள் முழுவதும் அவனுடன் எப்படி இணைந்து வாழ்வது என புரியாமல் தவித்து நின்றாள்...
"டேட் இப்போ உங்களுக்கு ஹாப்பியா" என்று வெறுப்பு நிறைந்த குரலில் கேட்கவும் "ரொம்ப சந்தோசம் பா" என்றார் பிரசாத் மகிழ்ச்சி முகமாய்...
அவன் தந்தையின் பேச்சில் வெறுப்படைந்தவன் அவரை இயலாமையுடன் பார்த்து நின்றான் ஓரு நிமிடம் ..
"நான் வெளிய வெயிட் பண்றேன்" என்று வெளியில் சென்றவன் ஜானவியை திரும்பி கூட பார்க்க வில்லை...
"ஜானவி..." என்று ஷேகர் அவளை அழைக்கவும் "அப்பா சொல்லுங்கப்பா" என்ற ஜானவி தன் விழி நீரை துடைத்தாள்...
"ஜானவி இது எல்லாமே உன் நல்லதுக்கு தான் மா... நான் இப்படி படுத்துட்டேனே... இனிமே உன் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு நான் ரொம்ப பயந்தேன் ஆனா இனிமே அந்த கவலை எனக்கு இல்லை... நீ ஒரு நல்ல குடும்பத்துக்கு மருமகளா போக போற மா...அந்த தம்பி ரொம்ப தங்கமான பிள்ளை... அது நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்ன்னு இல்லை... நீ சின்ன வயசுலருந்து பார்த்து வளந்தவன் தான அபிநயன்... இனிமே நீ அந்த வீட்டு மருமகளா பொறுப்பா நடந்துக்கனும் ... நீ நல்லா இருக்கனும் மா அது தான் அப்பாவோட ஆசை" என்று கூறியவரின் கையை பிடித்து கொண்டு மனம் உடைந்து அழுத ஜானவி "உங்க விருப்பபடியே நான் நடந்துக்குவேன் பா" உதட்டில் வார்த்தை வராமல் கூறினாள் ஜானவி...
![](https://img.wattpad.com/cover/343576451-288-kca5f6f.jpg)