"என்னை பாக்கவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா...
இப்படியே விட்டா கண்டிப்பா இது சரியா வராது..இது எல்லாத்துக்கும் இன்னைக்கே நான் ஒரு முடிவு கட்றேன்" என்று எண்ணியவளோ அவள் கைபேசியை எடுத்து அபிநயனுக்கு அழைப்பு விடுத்தாள்...அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங்கில் அமர்ந்திருந்தவன் "எக்ஸ்யூஸ்மி" என கூறிவிட்டு உடனே போனை எடுத்து பேச தொடங்கினான்...
"சொல்லுடா என்ன?.. என்னாச்சு.." என்றான் அவன் சற்று பயத்துடனும் அக்கறையுடனும் கலந்த குரலாக..
அவள் ஒரு நிமிடம் மௌனித்திருந்தவள்
"ஒன்னும் இல்ல இப்போ நீ எங்க இருக்க..."என்று கேட்கவும்அவன் சட்டென விழி சுருக்கியவன் "ஆபிஸ்ல தான்.. நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்.. உன் கிட்ட அப்புறம் பேசுறனே.. சாரி டா.."அவன் கெஞ்சலாக சொன்ன அடுத்த நொடியே சினத்துடன் அழைப்பை துண்டித்திருந்தாள் அவள்..
"எவ்வளவு நாள் தான் இப்படி வீட்டுக்குள்ளவே அடஞ்சி கிடக்குறது இன்னைக்கு நான் வெளி உலகத்தை பார்த்தே ஆகணும்... அதுக்கு இது தான் சரியான டைம்" என்று நினைத்தவளோ சிறுதும் தாமதிக்காமல் அவளது உடைகளை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்......
அலுவலகத்தில் எப்போதும் போல் வேலை நடந்து கொண்டிருந்தது.....
அபிநயன் ஒரு முக்கிய மீட்டிங்கில் கலந்து கொள்வதால் தன் மொபைலை சைலன்ட் மோடில் போட்டிருந்தான்...ப்ரீத்தி தன் கேபினில் அமந்திருந்தவள் "இந்த வாரத்துல எப்படியாவது பாஸ் கிட்ட லவ்வ சொல்லிடனும்....ஏன் இன்னைக்கு சொன்னா..?... நோ நோ அவர் மூட் எப்படி இருக்குனு பாத்து தான் சொல்லனும் இல்லைனா நம்ம காலி.... நான் மத்தவங்கள மாதிரி சாதாரண ஒர்க்கர்ஸ் ஒன்னு இல்லையே .. பாஸோட பர்சனல் ஆசிஸ்டன்ட். நான் தான் அவருக்கு ரொம்ப ஸ்பெஷல்.. எங்களுக்கு கல்யாணம் ஆகிட்டாலும் நான் அவர் பிஏ வா தான் ஒர்க் பண்ணுவேன்.." என மனதிக்குள் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள் ப்ரீத்தி....