இருவரின் காதலின் ஸ்பரிசதிர்கிடையில் இருவரும் கண்ணீருடன் நின்று தங்கள் கடந்த கால நிகழ்வுகளில் நிலைத்திருந்தனர்..
அந்த நிமிடம் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சட்டென தங்கள் முத்ததிலிருந்து வெளியில் வந்த இருவரும், அவர்கள் கண்ணீரை துடைத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்...
"ஆர் யூ ஓகே" என அவன் அவள் செவியில் மெல்லிய குரலில் வினவ "ம்ம்" என தலைசைத்தவள் யாரு வந்துருக்காங்கன்னு பாரு எனவும்..
அவன் தன்னவளின் நெற்றியில் லேசாக இழழை ஒற்றி எடுத்தவன் பின் "எஸ் கமின்" என குரல் கொடுக்க அடுத்த நிமிடமே உள்ளே வந்தார் மானேஜர்....
"சார் அந்த ஒர்க்க முடிச்சிட்டேன்..இதோ அந்த ப்ராஜெக்ட் பைல்" அவனிடம் பணிவுடன் நிட்டினார் மானேஜர்..
அவரை சற்றே நிமிர்ந்து பார்த்த அபிநயன் "மிஸ்டர் ரமேஷ் இனிமேல் இவங்க தான் என்னுடைய நியூ பிஏ....இவங்கள நம்ம ஸ்டாப்ஸ்குலாம் இன்ட்ரோடியூஸ் பண்ணுங்க..ப்ரீத்தி கிட்ட நான் பேசிக்கிறேன் ..." எனவும்
அபிநயன் பேச்சிற்கு மறுவார்த்தை பேசாத மானேஜரும் "ஓகே சார்.." என்க...
"ஒன் ஹவர் ல இவங்களோட கேபின் என் ரூம்ல என் டேபிள்க்கு ஆப்போசிட்ல இருக்கனும்..ஓகே இப்போ நீங்க போகலாம்.." என அபிநயன் இறுகிய குரலில் கூறி நின்றான்...
"ஓகே சார்..என்றவர் பணிவுடன் வாங்க மேம்" என்று ஜானவியை அழைக்கவும் சரி என தலையை அசைத்தாள் ஜானவி...
அவர் முன்னே செல்ல ஜானவி பின்னால் சென்றவள் வெளியில் செல்வதற்கு முன் தன் தலையை திருப்பி தன்னவனை பார்க்கவும் அவன் சிரித்த முகமாய் நின்று கொண்டிருந்தான்...
ஜானவியும் புன்னகை முகமாய் அங்கிருந்து செல்ல அபிநயன் சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்...
நீண்ட நாட்களுக்கு பின் தன் இருக்கையில் நிம்மதியுடன் அமர்ந்தவன் டேபிள் மேல் இருந்த அவளின் புகைப்படத்தை புன்முறுவலுடன் பார்த்தான் ஒரு நிமிடம் "உன்னை இனிமே இந்த போட்டோல தான் பாக்கணும்ன்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை.. ஏன்னா நீ தான் இனிமேல் எப்பவும் என் கூடவே இருக்கப்போறியே ஜானு.." என்று மனதிற்குள் மகிழ்ந்தவன் அருகில் இருந்த டெலிப்போனை கையில் எடுத்து ப்ரீத்தியை அவன் கேபினுக்கு வருமாறு அழைக்கவும் அவன் அழைத்த அடுத்த நிமிடமிடமே பறந்து ஓடி வந்து அவன் முன் நின்றாள் அவள்....