கிராமத்து மின்னல்கள்
(பகுதி: 06)
மின்னலுக்கு பயந்து என்னை கட்டி பிடித்தான் கதிர். அவனுடைய பிடி அவன் எவ்வளவு பயந்துள்ளான் என்பதை காட்டியது. அவன் பயத்தில் பிடியை விடாமல் இருந்தான். மின்னல் போய் சில வினாடிகள் ஆகி இருந்தன. அவன் உடல் நனைந்து இருந்ததால், அவன் என்னை பிடிக்கும் போது என் உடலில் உள்ள ஈரமும் சேர்ந்து உராய்வின் தத்துவத்தை விளக்கின. ஆம், இரு வெற்று உடம்புகள் முதன் முறையாய் ஒன்றுடன் ஒன்றாய் தழுவி பேசிக்கொண்டன.
கண்களை மூடி இருந்த அவன் மெதுவாய் திறந்து என்னை பார்த்தான். நானும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தேன். உடல் நனைந்து இருந்தாலும், அவன் உதடுகள் இரண்டும் நன்றாய் வறண்டு இருந்தன. அவனுடைய கருப்பு கலரில் அந்த உதடுகள் மட்டும் வெளிறிப்போய் இருந்தது. உலர்ந்த உதடுகளின் மேல் கோடுகளாய் தெரிந்தது, அவன் ரேகையை போல் இருந்தது. அந்த ஆரஞ்சு சுளைகள் என்னை சாப்பிட கூப்பிடுவது போல் இருந்தது.
அதைப்பார்த்ததும், என்னால் தாங்க முடிய வில்லை. என்னவன் கீழே தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டான். எழுந்தவன், சும்மா இருக்காமல், அவன் மேல் மோத, அவன் விரல்களால் தடுத்தான்,
"என்னல பண்ணுத? நானே பயந்து போய் இருக்கேன். இந்த நேரத்துல உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா?" என்ற கதிர் என்னை விட்டு விலகினான்.
நான் மெதுவாய் புன்முறுவல் செய்தேன்.
"ஏம்ல சிரிக்க?" என்று கதிர் சொன்ன அடுத்த கணம், இன்னொரு மின்னல் அடிக்க, அவன் ஓடி வந்து என்னை கட்டி கொண்டான்.
அவன் காதுகளில் நான் சொன்னேன், "இப்ப புரிஞ்சுதா நான் ஏன் சிரிச்சேன்னு?" என்றேன்.
கண்களை மூடிக்கொண்டே போடா என்றான் கதிர். வகுப்பில் எவ்வளவு அடாவடி பண்ணுறவன், இப்ப அடங்கி கிடப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்பு இன்னும் வந்தது.
"ஏலேய், சிரிச்சது போதும். எனக்கு பயமா இருக்கு. வீட்டுக்கு போலாம்" என்றான் கதிர்.
"இவ்வளவு மழையில எங்க போறது? போணும்னா அப்பவே போய் இருக்கணும். இப்ப முடியாது." என்றேன் நான்.
"அப்படின்னா, என்ன பண்றது?"
"நான் ஒண்ணு பண்ணுவேன். நீ என்ன வைய (திட்ட) கூடாது. சரியா" என்றேன் நான்.
"ஏதாவது பண்ணு. பயம் போனா சரி" என்றான் அவன்.
அவ்வளவு தான் சொன்னவனை இன்னும் இறுக்கமாய் அணைத்து, கன்னத்தில் ஒரு முத்தம் தந்தேன்.
"இவ்ளோ தானா? இது எப்படி பயத்தை போக்கும்" என்றான் கதிர்.
"அப்படின்னா, வேற பண்ணலாம்" என்ற நான், அவன் கீழ் உதட்டை மெதுவாய் என் இரு விரல்களால் அழுத்தி இழுத்தேன். என் உதட்டின் அருகில் இழுக்கவும், கதிர் அவனாகவே முன்னேறினான்.
என் கீழுதடை கடித்து அனுபவிக்க ஆரம்பித்தான். கண்களை இறுக மூடி அவன் மெதுவாய் அனுபவிக்கும் நேரத்திற்குள் இரண்டு முறை மின்னல் வந்து இடி இடித்தது. அவனிடம் பயமே இல்லை இப்போது.
"கதிரு, பயம் போச்சா?" என்றேன் நான்.
"ம்ம்ம்...."
"சரி, இவ்ளோ அழகா கிஸ் அடிக்க, முன் அனுபவம் இருக்காடே?" என்றேன் நான்.
"போலே, இது எல்லாம் இங்கிலீஸ் படத்தை பாத்து கத்துகிட்டது. இன்னைக்கு தான் முதல் தடவையா அனுபவிக்கிறேன்." என்றான் அவன்.
"என்ன படம்டே"
"டைட்டானிக் ல இருந்து நான் இங்கிலீஸ் படம் பாக்கிறதே இதுக்கு தான்" என்றான் கதிர்.
"சூப்பர்" என்ற நான் இப்போது அவன் உதட்டை கடிக்க ஆரம்பித்தேன். என்னே ஒரு சுகம். அமுத சுரபியாய் சுவை கூடிக்கொண்டே போனது. அவன் உதட்டை விட்டு பிரிய மனமே இல்லை. அந்த சுவை, எதனுடனும் அதை சமப்படுத்த முடியாது.
அனுபவித்தால் மட்டுமே தெரியும் சுவை அது. சில நிமிடங்களுக்கு பின், இருவரும் விலக, எங்களை அறியாமலே நாங்கள் இருவரும் அவரவர் உதட்டை நாக்கால் துடைத்து கொண்டோம். அவன் உதட்டின் சுவையை நான் என் நாக்கால் தேடினேன். அவனும் தேடினான்.
"என்னடே, பயம் போச்சா?" என்றேன் நான்.
"ம்ம்ம்... இனிமே எந்த இடி வந்தாலும் பயம் இல்லை" என்று அவன் சொல்ல, இன்னொரு மின்னலுடன் இடி வர, அவன் என் உதட்டை கவ்வினான்.
சில நிமிடங்களுக்கு பின் மின்னல், இடி எல்லாம் அடங்க, மழை சூடு பிடிக்க ஆரம்பித்தது. மின்னல் விட்ட சந்தோசத்தில், என்னை விட்டு விலகி மழையை ரசிக்க ஆரம்பித்தான் கதிர். மழையை ரசிக்கும் கதிரை நான் ரசிக்க ஆரம்பித்தேன்.
சற்று நேரத்திற்குள் பயந்து போய் என்னை வந்து மீண்டும் கட்டிக்கொண்டான், கதிர். என்னவென்றே எனக்கு புரிய வில்லை.
"என்னடா ஆச்சு?" என்றேன்.
"அங்க ஏதோ இருக்கு" என்றான் கதிர்,
"பயப்படாத டா. இது பாழடைஞ்ச மண்டபம். இங்க பூரான், பல்லி, வெடுக்காலி (தேள்), பாம்பு கூட இருக்கும். அதை போய் நம்ம தொந்தரவு பண்ணினா நம்மளை கடிக்கும். நாம தூரமா போனா, அதுவும் விலகி ஓடிரும்" என்ற நான், அவன் காட்டிய திசை நோக்கி போனேன். கதிர் என்னை கட்டிக்கொண்டு என் பின்னே வந்தான்.
அங்கு பார்த்ததும், நான் சத்தமாய் சிரித்து விட்டேன். அது ஒரு பெரிய மண்புழு. "டேய், உனக்கே இது அதிகமா தெரியலை. இது ஒரு புழுடா." என்றேன்.
"அது வேகமா ஓடுது. புழு அப்படி போகாது" என்றான் அவன்.
"இது செவிட்டு பாம்புடா, அது ஒண்ணும் பண்ணாது. பயப்படாத." என்றேன் நான்.
அவன் இன்னும் பயத்தில் இருந்து விடுபட வில்லை, மெதுவாய் அதைப்பார்த்துகொண்டே பின்னால் கால் வைத்தவன் இன்னும் பயந்தான்.
"கதிரு காலுக்கு கீழே ஏதோ ஓடுது" என்றான்.
பயத்தில் அவன் காலை என் மேல் வைக்க, நான் கீழே பார்த்து இன்னும் சிரித்தேன்,
"டேய் இது ரயில் பூச்சி, இது ஒண்ணும் பண்ணாது. அழகா சுருங்கி வட்டமடிக்கும். போடா, இதுக்கெல்லாம் பயந்து கிட்டு" என்றேன் நான்.
"சீனு, போலே. நான் இந்த வருசம் தான் இந்த ஊருக்கு வந்து இருக்கேன். இதுக்கு முன்னாடி நான் இருந்தது எல்லாம் டவுண்ல தான். அங்க எல்லாம் இந்த பிரச்சனை இல்லை." என்றான்.
"எப்படி இருந்தாலும், இதெல்லாம் உன்னை என்னிடம் நெருக்காமாக்கி இருக்கு" என்றேன்.
"எப்படி?" என்றவன் அப்போது தான் பார்த்தான், பயத்தில் அவன் இரு கால்களும் என் காலின் மேல், அழுத்தமாய் கட்டி கொண்டு இருந்தான் கதிர்,
"ஆமா" என்று வெட்கத்தில் சிரித்தான் கதிர்.
அப்போது இன்னொரு மின்னல் வர, அந்த வெளிச்சத்தில், ரோட்டின் எதிரே உள்ள சுவரில் எழுதிய வாசகம் கண்ணில் பளிச்சென பட்டது.
"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை.
உன்னை கை விடுவதும் இல்லை."
இருவரும் ஒரே நேரத்தில் பார்த்ததில் இருவரும் சிரித்து விட்டோம்.
ஒரு வழியாய் மழை நின்று விட, இருவரும் அவரவர் சட்டையை மாட்டி கொண்டு, வீட்டிற்கு செல்ல, தயாரானோம்.
"ரொம்ப தேங்க்ஸ் டா" என்ற கதிர் நன்றியின் அடையாளமாய் கன்னத்தில் முத்தமிட,
"இதெல்லாம் பழசு கண்ணா, எனக்கு புதுசு வேணும்" என்று என் உதட்டை காட்ட, அவன் அழகாய் இன்னொரு முறை அந்த பவள உதட்டின் சுவை தந்தான். அனுபவித்து, இருவரும் கிளம்பினோம்.
மறு நாள் முதல் அடுத்த ஒரு வாரமும் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம், முதலில் சிரிப்பு தான் வரும். அப்புறம் தான் பேசினோம்.
இவ்வளவு அழகாய் போய் கொண்டு இருந்த நேரத்தில் தான் புயலாய் நுழைந்தான் சங்கர். அவன் வந்த பிறகு கதிர் என்னிடம் அதிகம் பேசுவது இல்லை. சங்கர் கூடவே இருந்தான். நான் போனாலும், என்னை அனுப்பி விட்டு அவனிடம் நேரம் செலவிட ஆரம்பித்தான்.
புதிதாய் டிரான்ஸ்பர் ஆகி வந்து இருந்த வாத்தியாரின் பையன் தான் சங்கர். அவன் என்னுடைய கலர். நான் தான் நல்ல கலர் என்றால், அவனும் அதே கலர். இன்னும் அதிகமாய், அவன் சிரித்தாலும் கன்னத்தில் குழி விழும். கதிரும் வாத்தியார் பையன் என்பதால் இருவருக்கும் ஒத்து போய் விட்டது.
நான் இருக்கும் போதே கதிர் சொல்வான், "சங்கர், உன்னோட கன்னத்துல உள்ள குழி அழகா இருக்கு"
அவனும் பதிலுக்கு சொல்வான், "உனக்கு மட்டும் என்னவாம், உனக்கு கன்னத்துல விழுற குழியோட, அந்த தெத்துப்பல் இன்னும் அழகா இருக்கு" என்றதும், அந்த கதிர் விழுந்து விழுந்து சிரிப்பது எனக்கு இன்னும் கோவமாய் வந்தது.
நான் கோவத்தில் அந்த பாலத்து கள்ளியில் போய் சங்கர் லவ் கதிர் என்று எழுதினேன். ஒரு வழியாய் எழுதி முடித்து திரும்பினால், கோபமாய் எதிரே கதிர் நின்று கொண்டு இருந்தான்.
![](https://img.wattpad.com/cover/369818233-288-k797908.jpg)