கிராமத்து மின்னல்கள்
(பகுதி: 14)
அன்று மாலை வரை எதுவும் பேச வில்லை. மாலையில், வழக்கம் போல் சங்கர் அவனுடைய அப்பாவுடன் கிளம்ப, கதிர் மட்டும் இருந்தான். அதிக நேரம் இருந்தால் பேச வேண்டி இருக்கும் என்று நான் அவசர அவசரமாய் கிளம்பி என் சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினேன். அப்போது தான் பார்த்தேன், கதிருடைய சைக்கிள் என் சைக்கிள் பக்கத்திலேயெ இருந்தது. என்ன தான் இருந்தாலும், நாளை சங்கர் சைக்கிள் வந்தால், அவன் சைக்கிள் அங்கே போய் விடும் என்று மனதில் நினைத்து கொண்டு நான் கிளம்பினேன்.
மெதுவாய் நான் சைக்கிளில் போய் கொண்டு இருக்கும் போது, யாரோ வேகமாய் வருவது போல் தெரிந்தது. நானும் ஒதுங்கி வழி விட, அது கதிர். அவன் வந்த வேகத்தில், என் சைக்கிளின் குறுக்கே அவன் சைக்கிளை நிறுத்தினான். வேகமாய் இறங்கியவன் என்னையும் இறங்க வைத்தான். நான் இறங்கியதும், என் சட்டையை பிடித்தவன். கோபமாய் பார்த்தான். என் கண்களை பார்த்த அடுத்த நிமிடம் அவன் கோபம் மறைந்து அழுகை வர ஆரம்பித்தது. என்னை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. நான் அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.
அழுகையை நிறுத்திய அவன் பேச ஆரம்பித்தான்.
"சீனு, எனக்கு தெரியும். உனக்கு என்னை பிடிக்கும்ன்னு. உனக்கும் தெரியும், எனக்கு உன்னை பிடிக்கும்ன்னு. அப்புறம் ஏம்ல இப்படி இருக்க. நீ பேசும் போது நான் வேணும்ன்னு பேசாமலே இருந்தேன் முதல்ல. அப்புறம் தான் எல்லாம் சரி ஆச்சுல்ல.. அப்புறம் ஏம்ல, இப்பெல்லாம் நீ என் கூட பேச மாட்டேங்குத. ரெண்டு பேருக்கும் பிடிச்ச பிறவும் என்னல நம்மள பேச விடாம தடுக்குது. எனக்கு ஒண்ணுமே புரியலை. சொல்லுலே.. இல்லைன்னா எனக்கு மண்டையே வெடிச்சுரும் போல இருக்குல.. ப்ளீஸ்..." என்று அவன் கெஞ்ச கெஞ்ச என் மனம் சற்று மாற ஆரம்பித்தது. பேச வேண்டாம் என முடிவு எடுத்த நான் அவனிடம் மனதில் உள்ளதை சொல்லி விட்டால் இனி மொத்தத்திற்கும் பேச வேண்டாம் என முடிவு எடுத்தேன்.
என் தோளில் சாய்ந்த அவன் முகத்தை தூக்கினேன். அவன் அழுது அவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருந்தன. என்னை அறியாமல், அவன் கண்ணீரைத் துடைத்தேன். அதற்குள், அந்த வழியே வந்த ஒரு அண்ணாச்சி,
"ஏலேய், என்னலா ஆச்சு?" என்றார்.
சுதாரித்து கொண்ட நான்.
"அண்ணாச்சி, அவன் கண்ணுல வண்டு பட்டுச்சு, அதான் கலங்கி போச்சு. அதான் பாத்துட்டு இருக்கோம்." என்றேன்.
"நல்லா தண்ணியை வைச்சு கழுவுல. எல்லாம் சரி ஆயிரும்" என்றார் அந்த அண்ணாச்சி. சொன்னவர் கிளம்பவும், நான் கதிரை அழைத்து பக்கத்தில் இருந்த மைல் கல் மேல் உக்கார வைத்தேன். நான் கீழே இருந்து கொண்டேன். அவன் கால் அருகில், நான் பேச ஆரம்பித்தேன்.
"கதிரு, நான் என் மனசுல உள்ளதை சொல்றேன். நீ முடிவு பண்ணு, சரியான்னு" என்ற பீடிகையுடன் பேச ஆர்ம்பித்தேன்.
"உன்னை பாத்ததுல இருந்து உன் கூட பேசணும், பழகணும்ன்னு ஆசை இருந்துச்சு. நான் என்னென்னவோ டிரை பண்ணினேன். நீ தான் கண்டுக்கவே இல்லை. நீ என்னை முறைச்ச, திட்டுனே. நான் எல்லாம் பொறுத்து கிட்டேன். கடைசியா, நீயே வந்து என்னை பிடிச்சு இருக்குன்னு சொல்லும் போது, எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா. எனக்கே புரிய வில்லை. அந்த மழை நாள் என மனசுல உள்ள ஒரு நல்ல பதிவு. உன் கூடவே இருக்கணும். உன்னை பாத்துகிட்டே இருக்கணும், உன்னை என் பக்கத்துலே வைச்சு பொத்தி பொத்தி பாக்கணும்ன்னு எவ்ளோ ஆசை தெரியுமா?
ஆனா, அந்த சந்தோஷம் எல்லாம், அந்த சங்கர் வர வரைக்கும் தான் இருந்துச்சு. அவன் வந்தான். நீ ரொம்பவே மாறிட்ட. அவன் கிட்ட தான் பேசுன. என்னை தள்ளி வைச்சுட்ட. எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சி. அவனும் வாத்தியார் பையன் தானே. அதனாலே, ரெண்டு பேரும் ஜோடி சேந்துட்டீங்க, நான் நடுவுல எதுக்கு நினைச்சேன். இருந்தாலும், என்னால உன்னை மறக்க முடியலை. நீ எங்க இருந்தாலும் உன்னை தேடிக்கிட்டே இருந்தேன். என்னால முடியலை. அந்த தியேட்டர்ல நடந்துகிட்டது, நீ கூட ஒரு வார்த்தை சொல்லாதது, எனக்கே கேவலமா போச்சு, இனிமே நான் பேச கூடாதுன்னு நினைச்சேன்.
அப்புறம் நீ சொல்லி தான் அந்த சங்கர் என்கிட்ட பேசினான். நீ இல்லைன்னா அவன் நல்லா தான் பேசுறான். நீ வந்த, அவனும் மாறிட்டான், நீயும் மாறிட்ட. இருந்தாலும், நீ கூப்பிட்ட உடனே, என்னால மறுக்க முடியலை. அதான் நேத்து சாயந்தரம் பாலத்துக்கு வந்தேன். நீ என்னடான்னா, எல்லாம் முடிஞ்ச பிறகு, சாதாரணமா ஒரு வார்த்தை சொன்ன, அது என்னை நறுக்குன்னு குத்திச்சி, நான் என்ன உடம்பை தேடி அலையுறேன்னு நினைச்சியா? நான் நினைச்சா, எங்க ஊர்லயே நிறைய பேரு இருக்காங்க. சின்ன பசங்கள்ல இருந்து வயசான ஆளுங்க வரைக்கும். எனக்கு உன்னை பிடிச்சு இருந்துச்சி. அதனால தான் உன் கூட பண்ண ஒத்துக்கிட்டேன்."
மேலே பேச என் குரல் மாறியது. அழுகை கலந்த குரலானது.
நீ என்னடான்னா, என்னை உடம்பு தேடி அலையுற ஒருத்தனா நினைச்சுகிட்ட, போடா.. எப்படி இருந்தாலும், நீங்க எல்லாம், பெரிய இடம். இப்படி தான் இருப்பீங்க. நாங்க வளந்த இடம் அப்படி. எங்களுக்கெல்லாம் மனசு கிடையாதுன்னு நினைப்பு உங்களுக்கு. வேணும்னா வருவீங்க. இல்லைன்னா கழற்றி விட்டுட்டு போயிருவீங்க. என்னோட சோகம் என்னோடவே இருக்கட்டும்" என்று சொல்லி முடித்த என் கண்களிலும் கண்ணீர்.
கல் மேல் இருந்த அவன் டக்கென்று கீழே இறங்கினான். என்னை பிடித்து என் கண்ணீரை அவன் துடைத்தான்.
"அப்படி என்னடா சொன்னேன், அன்னைக்கு"
"சங்கரையும் நம்ம கூட சேத்துக்கலாமான்னு கேட்டல்ல?" என்றேன் நான்
"ஆமா"
"அப்படின்னா, நீயும் அவன் கூட எல்லாம் பண்ணி இருக்க, அப்படி தானே" என்ற என் வாயை டக்கென்று மூடினான்.
"இப்படி பேச எப்படிடா உன்னால முடியுது. அது பண்ணனும்னா, அது உன் கூட மட்டும் தான். அவனை சொன்னது, பிரண்டா சேத்துக்கலாம்னு. அதுக்கு காரணம் இருக்கு. நான் உன் கூட பேசுனா, அவனுக்கு பிடிக்கலை. நான் அவன் கூட பேசுனா உனக்கு பிடிக்கல. ஒரே கிளாஸ்ல இருந்துட்டு, இது எதுக்கு. நாம மூணு பேரும் பிரண்டா இருப்போமே. அதை மனசுல வைச்சு தான் நான் அப்படி சொன்னேன்" என்றான் அவன்.
இன்னும் தொடர்ந்தான் அவன்.
"சீனு, நீ ஏதேதோ தப்பா நினைச்சுகிட்ட. இது தான் உங்கிட்ட இருக்க கெட்ட பழக்கம். நான் பணக்காரன்னு நீயே நினைச்சிக்கிற. எங்க தாத்தாவும் உங்க அப்பா மாதிரி இருந்தவர் தான். எங்க அப்பா வாத்தியார், அவ்வளவு தான், வேற உனக்கும் எனக்கும் வித்தியாசம் எல்லாம் இல்லை. மேல், கீழ் வர்க்கம் எல்லாம் நீயா கற்பனை பண்றது. எனக்கு உன்னை பிடிச்சதால தான் நான் உங்கூட பேசுதேன். எனக்கு உன்னை பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். நான் சங்கர் கூட பேசும் போது, நீ சோகமா இருக்கிறதை பாத்தா எனக்கு சிரிப்பா இருக்கும், அதை நான் என்ஜாய் பண்ணினேன். அது எவ்வளவு தப்புன்னு, பின்னால தான் தெரிஞ்சுது எனக்கு.
ஆமா, நீயும் சங்கரும் பேசும் போதும், உன்னை பத்தி சங்கர் என்கிட்ட சொல்லும் போது எனக்குள்ள மனசுல ஒரு புரியாத கோபம், பயம் எல்லாம் இருந்துச்சி. அப்ப தான் நீ எவ்வளவு கஷ்ட பட்டு இருப்பன்னு தெரிஞ்சுது.
சாரிடா" என்றான் அவன்.
அப்படியானால், நான் தான் இது நாள் வரை தப்பா நினைச்சேனோ. பாவம் கதிர், அவனை இப்போது முழுமையாய் புரிந்து கொண்டேன். அவன் என்னை பார்க்க, முதல் முறையாய் ஒரு புன்முறுவல் என் முகத்தில். அவனும் சிரித்தான், அழகான தெத்துப்பல்லும், கன்னங்குழியும் என்னை இழுத்தது. அப்படியே அணைத்து ஒரு முத்தம் இட்டேன். அவனும் என்னை இழுத்து முத்தம் இட,
அவன் சொன்னான்,
"சீனு, ஏலேய், உனக்கு என் மேல என்ன கோவம்ன்னாலும் நேர்ல கேளுல. மனசுல வைச்சுக்காத. பேசுனா தான் முடிவு தெரியும். இல்லைன்னா மனசு தான் கஷ்டப்படும்"
"சரி கதிரு' என்றேன் நான்.
"பாலத்துக்கு கீழே" என்று கண்ணடித்தான் கதிர்.
"இன்னைக்கு வேணாமே" என்றேன்.
"நீ சொன்னா சரி தான்" என்றான்.
தனித்தனியாய் வந்த இருவரும் சேர்ந்தே சிரித்து கதை பேசிக்கொண்டு வீட்டுக்கு போனோம்.
மறு நாள் வந்தது, சங்கர், நான் மற்றும் கதிர் மூவரும் நண்பர்களானோம். அதன் பின் கோபம் என்ற ஒன்று எனக்கு சங்கர் மேல் இல்லை. ஒன்றாய் சுற்றினோம்.
அரையாண்டு முடிந்து, பத்தாம் வகுப்பின் கடைசி கட்டம் வந்தது. எங்கள் ஸ்கூலில், நைட் ஸ்டடி எல்லாருக்கும் உண்டு. அதாவது கடைசி இரு மாதங்கள் எல்லோரும் ஸ்கூலில் தான் தங்க வேண்டும்.
முதல் நாள் இரவு வகுப்பு முடிந்து தூங்க கிளம்பினோம். மூவருக்கும் ஒரு ஓரத்தில் இடம் எடுத்து கொண்டோம். சுவரை ஒட்டி நான், அடுத்து கதிர், அதற்கு அடுத்து சங்கர் என முடிவு செய்தோம். லைட் ஆப் செய்ய, கதிர், சங்கரை பார்த்து படுத்து இருந்தான். எனக்கு தூக்கம் வர வில்லை. என்னுடைய இரட்டைக்கிளி பெட்சீட் அவனுக்காக ஏங்கியது. சிறிது நேரத்தில், சங்கர் தூங்கி விட, கதிர் என்னை பார்த்து திரும்பினான், நான் அவனை எனது பெட்சீட்டினும் இழுத்தேன். முதன் முறையாய், இரவில் இருளில், ஒரே பெட் ஷீட்டில் இருவரும், அதுவும் மனதிற்கு பிடித்த கதிருடன். என்னை அறியாமல், அவனை இழுத்து என் மேல் போட்டேன். அவன் முழுவதும் என் மேல், அப்படியே அவன் கன்னத்தில், நெற்றியில் என கிடைத்த இடத்தில் எல்லாம் முத்தமிட, அவனும் சளைக்காமல் முத்தமிட, முத்தத்தில் களிந்தது அடுத்த அரை மணி நேரமும்.
அவன் கைகள் மெதுவாய் கீழே வர, அதை நான் தடுத்து விட்டேன்.
"ஏண்டா?" என்றான கதிர்.
"கஞ்சி வந்தா நாளைக்கு காலைல பெட் ஷீட்ல கரை தெரியும்டா" என்றேன் நான்.
"சரிடா" என்றவன் என்னை கட்டி கொண்டான்.
எங்கள் இருவரை பொறுத்த வரை அது தான் முதல் இரவு. சிறிது நேரத்தில் அப்படியே இருவரும் உறங்கி விட்டோம்.
காலையில் சங்கர் எழுப்பிய பிறகு தான் இருவரும் விளித்தோம்.
"என்ன ஆச்சு" என்றான் சங்கர்.
"புது இடம் தூக்கம் இல்லை" என்றேன் நான்.
"தெரியும், தெரியும். நடக்கட்டும் நடக்கட்டும்,"
"என்னடா?" என்றான் கதிர்,
"நீ கலக்குடா கதிர்" என்று கண்ணடித்தான் சங்கர்.
ஆடிப்போய் விட்டோம் நானும் கதிரும்.
(தொடரும்)