காதலித்துப் பார்...
உள்ளம் துள்ளிக் குதிக்கும்...
எண்ணங்கள் சிறகடிக்கும்...அவளின் கண்கள் உன்னை கிறங்கடிக்கும்...
சிரிப்பும் உன்னை சிறை பிடிக்கும்...பூக்களை புகழ்ந்து தள்ளுவாய்...
கவிதைகள் ஆயிரம் எழுதி முடிப்பாய்...குடையிருந்தும் மழையில் நனைவாய்...
தனிமையில் சிரிக்க பழகிடுவாய்...ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் என்பாய்...
பானைக்குள் யானை செல்வது சாத்தியம் என்பாய்...கரையில் நின்று கொண்டே கப்பலோட்டுவாய்...
காற்றில் மிதந்து கொண்டே கார் ஓட்டுவாய்...கரம் பிடித்தே உயிர் வாழ்வாய்...
காலம் முழுக்க காத்திப்பாய்...காதலித்துப் பார்...